வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும். இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன.

சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு. மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல்.