வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா. கதிரவேற்பிள்ளை (டிசம்பர் 3, 1860[1], - 1907), புலோலி, யாழ்ப்பாணம்) தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். யாழ்ப்பாணம் மேலைப் புலோலியில் வாழ்ந்த நாகப்ப பிள்ளை, சிவகாமி அம்மையாரின் இல்லறப் பயனாக, 1844 ஆம் ஆண்டு பிறந்த கதிரவேற்பிள்ளை, அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆறுமுக நாவலரின் மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்.