வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவபெருமான் தனது குடும்பத்துடன்

சிவபெருமான் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாவர். தமிழர்களின் ஐந்தினை தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது. இந்த வழிபாடானது, சிவ மதமென்றும், சைவ மதமென்றும் அறியப்பெறுகிறது. சிவனிடமிருந்தே அனைத்தும் தோன்றியதாகவும், ஆழிக்காலத்தில் சிவனுடைய சதாசிவ ரூபத்தில் அனைத்தும் அடங்குவதாகவும் சைவநூல்கள் விளக்குகின்றன. சிவபெருமானின் சக்தி வடிவமாக உமையம்மை வழிபடப்படுகிறார். இத்தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற இரு குழந்தைகள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இவருக்கு கையிலை மலை இருப்பிடமாகவும், குறிஞ்சி நிலத்துக்குறிய கொன்றை மலர் மாலையாகவும், வெண் காளை சிவவாகனமாகவும், வாசுகி பாம்பு ஆபரணமாகவும் அறியப்பெறுகிறது. இந்து சமயத்தின் சக்திவாய்ந்த மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளாகவும், சைவத்தில் படைத்தல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என்ற ஐந்தொழில்களையும் செய்பவராகவும் அறியப்பெறுகிறார். அத்துடன் அறுபத்து நான்கு கலையில் வல்லவராகவும், அருவம், உருவம், அருவுருவம் என தோற்றமளிப்பவராகவும் வணங்கப்பெறுகிறார்.