வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் சைவ சமய வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்பு கட்டுரை என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் சைவ சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவமைப்பு
{{வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு
  |படிமம்        =
  |படிம தலைப்பு =
  |உரை         =
  |இணைப்பு     =
  |முகப்பு       = வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரைகள்
}}

<noinclude>
[[பகுப்பு:சிறப்புக் கட்டுரை - சைவ வலைவாசல்‎]]
</noinclude>

காப்பகம்[தொகு]

1 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/1

சிவபெருமான் தனது குடும்பத்துடன்

சிவபெருமான் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாவர். தமிழர்களின் ஐந்தினை தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது. இந்த வழிபாடானது, சிவ மதமென்றும், சைவ மதமென்றும் அறியப்பெறுகிறது. சிவனிடமிருந்தே அனைத்தும் தோன்றியதாகவும், ஆழிக்காலத்தில் சிவனுடைய சதாசிவ ரூபத்தில் அனைத்தும் அடங்குவதாகவும் சைவநூல்கள் விளக்குகின்றன. சிவபெருமானின் சக்தி வடிவமாக உமையம்மை வழிபடப்படுகிறார். இத்தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற இரு குழந்தைகள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இவருக்கு கையிலை மலை இருப்பிடமாகவும், குறிஞ்சி நிலத்துக்குறிய கொன்றை மலர் மாலையாகவும், வெண் காளை சிவவாகனமாகவும், வாசுகி பாம்பு ஆபரணமாகவும் அறியப்பெறுகிறது. இந்து சமயத்தின் சக்திவாய்ந்த மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளாகவும், சைவத்தில் படைத்தல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என்ற ஐந்தொழில்களையும் செய்பவராகவும் அறியப்பெறுகிறார். அத்துடன் அறுபத்து நான்கு கலையில் வல்லவராகவும், அருவம், உருவம், அருவுருவம் என தோற்றமளிப்பவராகவும் வணங்கப்பெறுகிறார்.



2 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/2

சேக்கிழார்

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இந்நூல் இரண்டு காண்டங்களையும், பதிமூன்று சருக்கங்களையும் கொண்டுள்ளது.



3 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/3

திருவைந்தெழுத்து

சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும்.இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்குப் பல பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாகத் 'திருவைந்தெழுத்து' கூறப்படுகிறது.



4 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/4

திருநீறு

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.இது கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம்ரட்சை, சாரம், பஸ்மம், பசிதம், விபூதி என் பல வகைகளை கொண்டுள்ளது.



5 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/5

நாயன்மார்

கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார் (Nayanars) எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் அறுபத்துமூவராவர். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.



6 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/6

சந்தான குரவர்கள்

சந்தான குரவர்கள் சைவ சமயத்தின் அன்பு, பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்கள் போன்று அறிவு நெறியை வளர்த்தவர்கள் ஆவர். சந்தான குரவர்களை அகச்சந்தான குரவர்கள், புறச்சந்தான குரவர்கள் என இருவகையினர். திருக்கைலாய பரம்பரையிலிருந்து தொடங்கும் திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். அகச்சந்தான குரவர்களில் நான்காமவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வரும் புறச்சந்தான குரவர்கள் ஆவர்.



7 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/7 சமயகுரவர் என்போர் சைவசமயத்துக்குத் தொண்டாற்றிய நால்வராவர். அவர்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பவராவர். நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் தமிழ் நாட்டிலுள்ள பல திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டுப் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. மறைந்துபோன பாடல்கள் போக, இப்போதுள்ள இவர்களின் பாடல்கள் ஏழாயிரம் ஆகும். அடுத்த நூற்றாண்டில் வந்த சுந்தர மூர்த்தி நாயனார் பாடல்கள் 1000. இம்மூவரின் பாடல்களும் தேவாரம் என்று போற்றப் பெறுகின்றன.ஞானசம்பந்தர் கையில் தாளம் ஏந்தி, பாடியும் ஆடியும் சிவனை வழிபட்டார். பாணர் குடும்பத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடைய பாடல்களுக்கு யாழ் இசைத்து வந்தார். ஞானசம்பந்தர் தம் பாடல்களில் அந்தந்த ஊர்க் கோயில்களைப் பாடுமிடத்தில் கோயில்களைச் சூழ்ந்த இயற்கை அழகுகளையும், கற்பனைச் சுவையுடன் எடுத்துரைத்துப் பாடியுள்ளார்.



8 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/8

முருகன்

முருகன் இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.



9 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/9

நந்தி தேவர்

சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.



10 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/10 மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.சிவராத்திரி விரதம் மகாசிவராத்திரி , யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைப்படும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.



11 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/11 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/11

12 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/12 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/12

13 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/13 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/13

14 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/14 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/14

15 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/15 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/15

16 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/16 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/16

17 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/17 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/17

18 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/18 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/18

19 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/19 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/19

20 கட்டுரை[தொகு]

வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/20 வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/20

பரிந்துரைகள்[தொகு]