வலைவாசல்:கிறித்தவம்/கிறித்தவ நபர்கள்/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தந்தை பத்தாம் பயஸ் (1835-1914) என்பவர் 1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்துப் பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிக முக்கியச் செயல்பாடாகக் கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபைச் சட்டத் தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்பட்டது அதுவே முதல் முறையாம். இவர் கிறித்துவ ஒழுக்கங்களைத் தனிமனித வாழ்விலும் கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. 1908-ல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து அப்போஸ்தலர் மாளிகையில் தங்க வைத்தார். இவர் தம் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரின் மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். பலர் இவரின் இறப்புக்கு பின் இவரைப் புனிதரெனக் கொண்டாடி வெளிப்படையான வணக்கம் செலுத்தினர்.