வலைவாசல்:கட்டுரைப்போட்டி/அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு, 2010 சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூர் நகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் ஒன்பதாவது இணையத் தமிழ் இணைய மாநாட்டையும் நடத்துகிறது. இதனை ஒட்டித் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தகுந்த தகவல் பக்கங்களை (கட்டுரைகள்) எழுதும் போட்டி நடைபெற்றது. போட்டிக்கான கட்டுரைகளை அனுப்பும் காலம் மே 15, 2010 அன்று முடிந்தது.

இப்போட்டியில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயங்குனர் மருத்துவம் (பிசியோ தெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பலதொழில்நுட்பப் பயிலகம் முதலிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் பங்கு கொண்டனர். போட்டிக்கு வந்த தகவல் பக்கங்களில் தகுதியானவை தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும். சிறந்த தகவல் பக்கங்களை எழுதியோருக்கு மதிப்பு மிகுந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டி முடிவுகளை இங்குக் காணலாம்.