வலைவாசல்:ஊடகப் போட்டி/அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
To view the introduction of the contest in English, click here
முகப்பு   அறிமுகம்   விதிகள்   பங்கேற்க   முடிவுகள்   அ.கே.கே  

அறிமுகம்[தொகு]

தமிழ் - தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்குமாக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது.

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது அனைவராலும் முடிவதில்லை. கிடைக்கும் நேரம் அரிதாக இருப்பதும், கட்டுரை எழுதுவதில் ஆர்வமின்மையும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் படம் எடுப்பது சிலருக்கு எழுதுவதிலும் பார்க்க எளிய விசயமாக இருக்கலாம். மேலும் நீங்கள் ஏற்கனவே எடுத்த தரமான படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள் உங்களிடம் இருக்கலாம். தற்போது தரவேற்ற முறையும் மிகவும் எளிதாகி இருக்கின்றது. எனவே நீங்களும் இலகுவாக இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். அதன்மூலம் தமிழ் விக்கித் திட்டங்களில் உங்கள் பங்களிப்பும் இடம்பெறும்.

விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் கோப்புகளைப் பதிவேற்றுவதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியா மட்டுமன்றி பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்சனரி, விக்கிநூல்கள், விக்கிசெய்திகள் போன்ற பிற விக்கித் திட்டங்களிலும் இக்கோப்புகளைப் பயன்படுத்தலாம்.