வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி சங்கரர்

ஆதி சங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர். இளமை பிராயத்தில் கௌடபாதர் சீடரான கோவிந்த பகவத்பாதர் இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார். வேதிய உபநிஷத்கள் மற்றும் பாதராயணர் இயற்றிய பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டிண்மை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். இது மற்றும் அல்லாது பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொது கருத்து. சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம், விவேக சூடாமணி, உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.