வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகினி

மோகினி (சமஸ்கிருதம்:मोहिनी, மோகினி) என்பது இந்து கடவுளான திருமால் எடுத்த பெண் அவதாரமாகும். காண்போரை தன்னுடைய மோகனத்தினால் மயக்கும் வல்லமையுடைய இந்த அவதாரம், மோகினி அவதாரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்து தொன்மவியலில் மோகினி அவதாரம் பற்றி மகாபாரதத்திலும், பாகவதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமால் பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதத்தினை தேவர்களுக்கு மட்டும் பிரித்து தருவதற்காகவும், பிட்சாடனருடன் இணைந்து தருகாவன ரிசிகளின் ஆணவம் அழிக்கவும், பசுமாசுரனை அழிக்கவும் என பல முறை மோகினியாக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மோகினி, சிவனுடன் உடலுறவில் ஈடுபட்டு சாஸ்தா என்ற குழந்தையை தோற்றுவித்தாகவும், பாரதபோரில் களபலி தருவதற்காக தேர்ந்தெடுக்கப்பெற்ற அரவானின் திருமண ஆசையை நிறைவேற்றியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன.