வலைவாசல்:இந்திய அரசு/அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:PGoI

இந்திய அரசு அதன் வரையறுக்கப்பட்ட சட்டத்தின்படியான, கூட்டாட்சி, நாடாளுமன்றம் மற்றும் அதன் மக்களாட்சி குடியரசுப் பிரதிநிதிகளுடன், இந்தியப் பிரதமரின் தலைமையில் நடைபெறுகின்றது. இது இந்திய அரசியலமைப்பின் படி ஜனவரி 26, 1950 இல் கட்டமைக்கப்பட்டது மற்றும் இதன் ஒன்றிணைந்த கூட்டாட்சித் தத்துவத்தின்படி 28 மாநிலங்களும், 6 ஆட்சிப் பகுதிகளும் மற்றும் 1 ஆட்சிப் பகுதி தேசிய தலைநகரமும் நிர்மானிக்கப்பட்டு அரசின் ஆட்சி நடைபெறுகின்றது. பொதுவாக இந்தியாவின் ஒன்றிணைந்த கூட்டாட்சி இந்தியக் குடியரசு என அழைக்கப்படுகின்றது. இந்திய அரசு சட்டமியற்றுமிடம், செயலாட்சியர்கள் மற்றும் நீதிமுறைமைகளை கிளைகளாக கொண்டு இயங்குகின்றது. சட்டமியற்றும் கிளையாக இந்தியாவின் ஈரவையாகக் கொண்ட நாடாளுமன்றம் மேலவை எனும் மாநலங்களவையாகவும், கீழவை எனும் மக்களவையாகக் கொண்டு செயல்படுகின்றது. செயலாட்சியர்களாக இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையின் குழுவினர்கள் செயல்படுகின்றனர். நீதிமுறைமைகள், சட்டமியற்றாளர் மற்றும் செயலாட்சியர்களிடமிருந்து தனித்து தன்னாட்சி பெற்றனவாக விளங்குகின்றன. உச்ச நீதிமன்றம்- உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் அவரின் துணை கொண்டு இயங்குபவர்களாக 25 நீதிபதிகளும் செயல்படுகின்றனர். இத்ன சட்ட முறைகள் கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு பொருந்துவனவாக பொதுச் சட்ட முறை மற்றும் நடைமுறைச் சட்டங்களாகவும் கொண்டுள்ளன. இந்தியா பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிமுறைமைகளை கட்டாயமாக பின்பற்றுவனவாகவும் அவற்றை நடைமுறை படுத்துவனவாகவும் உள்ளது.