வலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

கங்கை இந்தியாவின் முக்கிய ஆறாகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது. பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.

படம்: User:
தொகுப்பு