வலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, தென்னிந்தியா மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். உளுத்தம் பருப்பில் செய்யும் வடையை உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். கடலைப் பருப்பில் செய்வதை பருப்பு வடை, கடலை வடை, மசாலா வடை என்றும் அழைப்பர். இந்து மதத்தில் அனுமாருக்கு வடை மாலை சாத்துவது சிறப்பு.

படம்: User:
தொகுப்பு