வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லுட்விக் போல்ட்சுமான் (18441906) ஒரு ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் படிப்பைத் தொடர்ந்து, 1866 இல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார். அணு மற்றும் அணுத்துகள் மீது தான் போல்ட்ஸ்மேனின் முழு கவனமும் இருந்தது. 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் பகிர்வு', 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் புள்ளிவிவரம்' ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைகளாகத் திகழ்ந்து கொண்டிருகின்றன. நகர்ந்து கொண்டிருக்கும் வாயுக்கள் மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துக்கான சமன்பாட்டினை வரையறுத்து தந்தார். போல்ட்சுமான் கண்டறிந்து அறிவித்த இத்தகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன.