வலைவாசல்:அப்பிள் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிள் நிறுவன வலைவாசல்
   
.


   

அப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் (முந்தையப்பெயர்: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்) ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் ஒன்றாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO), தவிசாளராகவும் டிம் குக் விளங்குகின்றார். 2010 செப்டம்பர் கணக்கெடுப்பின்படி, உலகளவில் இந்நிறுவனத்தில் 49,400 பேர் வேலை செய்கிறார்கள்.

மேலும்...



   

சிறப்புக் கட்டுரை

ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்.


   

உங்களுக்குத் தெரியுமா?

  • அப்பிள் நிறுவனத்தின் தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஒரு முறை அவரது நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட நிகழ்வு 1985இல் இடம்பெற்றது.
  • பிரபலமாக அறியப்படம் ஐபாட் முதன் முறையாக 2001 அக்டோபரில் வெளியிடப்பட்டது.
  • 2007 சனவரியில் ஐபோன் (படம்) முதன்முறையாக உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
  • ஸ்டீவ் வாஸ்னியாக் 1976 இல் ஆப்பிள் கணினி நிறுவனத்தை ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் உரோனால்டு வேன்னுடன் இணைந்து தொடங்கினார்.
  • ஐபொட் வெளிவரமுன்னரேயே பல எம்பி3 இயக்கிகள் இருந்தாலும், ஐபொட்டில் விலை மற்றும் கொள்ளவு ஆகிய காரணங்களால் ஐபொட் பிரபலமானது.
  • ஐபோனில் இயங்கும் பல செயலிகள் ஐபொட் டச்சிலும் இயங்கும்
   

செய்ய வேண்டியவை

  • இதுவரை ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய தவிசாளர்களுக்கான கட்டுரைகளை எழுத வேண்டும்.
  • ஆப்பிள் நிறுவனம் தாபிக்கப்பட்டபோது ஸ்டீவ் உடன் பணியாற்றிய அவரின் நண்பர்கள் பற்றிய கட்டுரை எழுதவேண்டும்.
  • விக்கிமீடியாவிற்கான பெட்டியில் உள்ள 404 தொடுப்புகளை சரி செய்ய வேண்டும்.
  • ஐஓஎஸ் 7 வரை இது வரை வெளிவந்து அனைத்து இயங்குதளங்களுக்குமான கட்டுரைகளை எழுதுதல் Y ஆயிற்று


   

செய்திகளில்

   

பகுப்புகள்

[+] ஐ சொடுக்கி உப பகுப்புகளைக் காணலாம்
   

விக்கித் திட்டங்கள்

   

தலைப்புகள்


   

சிறப்புப் படம்

ஐ-போன் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நுண்ணறி பேசி வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் நகர்பேசி இயங்குதளத்தால் செயல்படுகிறது. இந்த நகர்பேசி தொடுதிரைத் தொழில்நுட்பம் கொண்டது. படத்தில் ஐ-போன் 3ஜி காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு

   

தொடர்புடைய வலைவாசல்கள்

பௌத்தம்அறிவியல்
பௌத்தம்
ஜைனம்தொழினுட்பம்
ஜைனம்

பிழை:படம் செல்லத்தக்கதல்ல அல்லது இல்லாத ஒன்று

சமயம்கணிதம்‎
சமயம்
அறிவியல் தொழினுட்பம் கணினியியல் கணிதம்‎


   

விக்கிமீடியாவில்

Purge server cache