வலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்
பிறப்புValayapatti
பணிPercussionist

வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார்.[1]

இசைப் பயிற்சி[தொகு]

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வலயப்பட்டி எனும் ஊரில் பிறந்த சுப்பிரமணியம், ஆரம்பத்தில் தனது தந்தை ஆறுமுகத்திடம் நாதசுவர இசையினைக் கற்றார். பின்னர் தவில் வாசிக்கும் கலையினை மன்னார்குடி ராஜகோபால பிள்ளையிடம் கற்றார். அக்காலகட்டத்தில் சிறந்து விளங்கிய நாச்சியார்கோயில் ராகவ பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை ஆகியோரின் தவில் இசையினை கேட்டுக் கேட்டு தனக்குரிய ஒரு பாணியினை தான் உருவாக்கிக் கொண்டதாக செவ்வியொன்றில் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.[2]

இசைப் பங்களிப்புகள்[தொகு]

பிரபல நாதசுவரக் கலைஞர்கள் திருவீழிமிழலை சகோதரர்கள், செம்பனார்கோயில் சகோதரர்கள், காருக்குறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் இவர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். கிளாரினெட் கலைஞர் ஏ. கே. சி. நடராஜனுடன் இணைந்து செய்த இசை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. நாதசுவரக் கலைஞர் திருவிழா ஜெயசங்கருடன் இணைந்து பெரும் எண்ணிகையில் இசை நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்.[2]

இலய நுணுக்கத்தில் வல்லவரான தவில் இசைக் கலைஞர் திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளைக்கு இணைத் தவில் வாசித்துள்ளார். இசையுலகில் பெரிதும் பேசப்பட்ட இணைகளில் ஒன்று, குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் – வலயப்பட்டி தவில் இசையாகும். இவர்களின் இணைந்த இசை நடைபெறாத தமிழக ஊரே இல்லை என சொல்லத்தக்கவகையில் ஏறத்தாழ 3000 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.[2]

பெற்ற சிறப்புகள்[தொகு]

  • சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றுள்ள முதல் மற்றும் ஒரே தவில் இசைக் கலைஞர் இவராவார் (2014 ஆம் ஆண்டு, ஜனவரி 1 அன்றின்படி).[2]
  • 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்றின்படி, 15,000 இசை நிகழ்ச்சிகளை தனது 61 ஆண்டுகால இசைப் பயணத்தில் இவர் செய்துள்ளார்.[3]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Profile
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Sangita Kalanidhi for Valayapatti Subramaniam". 2009-07-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-01-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. The rhythms of his life[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]