வலைக் குறிப்புரை
Appearance
வலைக் குறிப்புரை (web annotation) என்பது வலைத்தளம், வலைப்பதிவு, படம், நிகழ்படம் போன்ற இணைய வளங்கங்களோடு இணைப்புப் பெற்ற குறிப்புரை ஆகும். ஒரு வளத்தைப் பற்றி அல்லது அந்த வளத்தோடு தொடர்புடைய பிற வளங்களைப் பற்றிய குறிப்புக்களை பகிர குறிப்புரை பயன்படுகிறது.[1] கருத்து, குறிசொல், விளக்கவுரை என்று பல்வேறு வகைகளில் இந்தக் குறிப்புரை அமையலாம். புலைமைசார் பதிப்பித்தலில், கற்றல் கற்பித்தலில், ஆய்வில், ஊடகவியலில், கருத்துப்பகிர்வில் குறிப்புரை முக்கியத்துவம் பெறுகிறது.
நூல் மதிப்பீடு, கருத்து அல்லது பின்னூட்டம், பல்லூடக குறிப்புரை, மொழிபெயர்ப்புக் குறிப்புரை என்று வலைக் குறிப்புரைகள் பல வகைப்படலாம்.
சீர்தரங்கள்
[தொகு]உலகளாவிய வலைச் சேர்த்தியம் வலைக் குறிப்புரை பணிக் குழு ஒன்றினை வைத்துள்ளது. இது மூன்று பரிந்துரை முன்மொழிவுகளை முன்வைத்துச் செயற்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Web Annotation Data Model". உலகளாவிய வலைச் சேர்த்தியம். 06 September 2016. Retrieved 29 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)