வலேரி பொல்யாக்கொவ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வலேரி விளாடிமீரொவிச் பொல்யாக்கொவ் Valeriy Vladimirovich Polyakov | |
---|---|
![]() | |
விண்வெளி வீரர் | |
தேசியம் | ரஷ்யர் |
தற்போதைய நிலை | இளைப்பாறியவர் |
பிறப்பு | ஏப்ரல் 27, 1942 தூலா, தூலா ஓப்லஸ்த், ரஷ்யா |
வேறு தொழில் | மருத்துவர் |
விண்பயண நேரம் | 678நா 16ம 32நி |
தெரிவு | மருத்துவக் குழு 3 |
பயணங்கள் | சோயூஸ் TM-6, மீர் சோயூஸ் TM-7, சோயூஸ் TM-18, ஈர், சோயூஸ் TM-20 |
வலேரி விளாடிமீரொவிச் பொல்யாக்கொவ் (Valeriy Vladmirovich Polyakov ரஷ்ய மொழி: Вале́рий Влади́мирович Поляко́в, பிறப்பு: ஏப்ரல் 27, 1942) ஒரு ரஷ்ய விண்வெளி வீரர ஆவார். மனித விண்வெளி வரலாற்றில் இவரே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் ஆவார். மீர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளிவீரராக 14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில் 14 மாதங்களுக்கு மேலாக விண்ணில் காலம் கழித்து சாதனை புரிந்தார். இவரது மொத்த விண்வெளிக் காலம் 22 மாதங்களாகும்.
ரஷ்யாவின் தூலா நகரில் பிறந்த இவர் மார்ச் 22, 1972 இல் விண்வெளிப் பயணத்துக்காக மூன்றாம் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஜூன் 1, 1995 இல் இளைப்பாறினார்.
வலேரி தூலாவில் தனது ஆரம்பக் கல்வியை 1959 இல் முடித்து மாஸ்கோவில் முதலாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் பட்டதாரி ஆனார். பின்னர் வானியல் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.
விண்வெளிப் பயணங்கள்[தொகு]
- சோயூஸ் TM-6 / சோயூஸ் TM-7 - ஆகஸ்ட் 28, 1988 முதல் ஏப்ரல் 27, 1989 வரை - 240 நாட்கள், 22 மணி, 34 நிமிடங்கள்
- சோயூஸ் TM-18 / சோயூஸ் TM-20 - ஜனவரி 8, 1994 முதல் மார்ச் 22, 1995 - 437 நாட்கள், 17 மணி, 58 நிமிடங்கள்