உள்ளடக்கத்துக்குச் செல்

வலேரி பார்சுகோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலேரி பார்சுகோவ்
Valeri Barsukov
பார்சுகோவ், 1986
பிறப்பு(1928-03-14)14 மார்ச்சு 1928
மாசுக்கோ, சோவியத் ஒன்றியம்
இறப்பு22 சூலை 1992(1992-07-22) (அகவை 64)
மாசுக்கோ, உருசியா
தேசியம்உருசியர்
துறைநிலவியல்
கல்வி கற்ற இடங்கள்உருசிய மாநிலப் புவியியல் ஆய்வு பல்கலைக்கழகம்

வலேரி பார்சுகோவ் (Valeri Barsukov) சோவியத் உருசியாவைச் சேர்ந்த ஒரு புவியியலாளர் ஆவார். வலேரி லியோனிடோவிச் பர்சுகோவ் என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1928 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதியன்று சோவியத் ஒன்றியத்தின் மாசுக்கோ நகரத்தில் இவர் பிறந்தார். விண்வெளி அறிவியல் மற்றும் கோள் அறிவியலின் ஒரு கிளையான ஒப்பீட்டு கோளறிவியல் மற்றும் புவி வேதியியல் துறையில் பணியாற்றினார்.[1] 1976 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை விளாடிமிர் இவானோவிச்சு வெர்னாட்சுக்கி புவி வேதியியல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். 1987 ஆம் ஆண்டில் தனது பணிக்காக விளாடிமிர் இவானோவிச்சு வெர்னாட்சுக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.[2] செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. 1992 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 ஆம் தேதி மாசுக்கோவில் இவர் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Huntress, Jr., Wesley T.; Marov, Mikhail Ya. (2011). Soviet Robots in the Solar System: Mission Technologies and Discoveries. New York: Spring Science + Business Media. p. 19. ISBN 9781441978981.
  2. "Soviets looking at manned moon mission by 2000.". Defense Daily. July 20, 1989. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-5458490_ITM. பார்த்த நாள்: 2008-06-22. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலேரி_பார்சுகோவ்&oldid=4417402" இலிருந்து மீள்விக்கப்பட்டது