வலுவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Aetobatus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
வலுவாடி
துர்கசு கைகோசு தீவுகள் பகுதியில் ஒரு வலுவாடி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Aetobatus
இனம்:
இருசொற் பெயரீடு
Aetobatus narinari
(Euphrasén, 1790)[2]
Map showing Distribution of A. Narinari
Range of spotted eagle ray as traditionally recognized, but see text
வேறு பெயர்கள் [3]

Aetobatis latirostris
Aetobatis narinari
Aetomylus maculatus
Myliobatis eeltenkee
Myliobatis macroptera
Myliobatus punctatus
Raia quinqueaculeata
Raja narinari
Stoasodon narinari

வலுவாடி அல்லது புள்ளித்திருக்கை ( Spotted eagle ray ) என்பது கழுகு திருக்கை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குருத்தெலும்பு மீன் ஆகும். இது பாரம்பரியமாக உலகளவில் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட வெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகிறது. வலுவாடிகள் பொதுவாக தனியாகவே காணப்படுகின்றன. சிலசமயங்களில் கூட்டமாகவும் நீந்துகின்றன. இவை உள்பொரி முட்டைகளைக் கொண்டவை. பெண் மீன்கள் தங்கள் உடலுக்குக்குள்ளேயே முட்டைகளை குஞ்சுபொரித்து பின்னர் குட்டி போடுகின்றன.

பசுமஞ்சள் அல்லது கருநீல நிறம் கொண்ட இந்தத் திருக்கையின் உடலில் வெள்ளை புள்ளிகள் காணப்படும். இத்திருக்கைக்கு ஒப்பீட்டளவில் நீண்ட வால் இருக்கும். வாலின் முனையில் நச்சு முட்கள் இருக்கின்றன. வலுவாடிகள் பொதுவாக சிறிய மீன்கள் மற்றும் ஓடுடைய கணுக்காலிகளை உணவாக கொள்கின்றன. மேலும் சில சமயங்களில் கடலடி படுக்கை மணலை தன் மூக்கால் கிளறி உணவைத் தேடி எடுக்கும். வலுவாடிகள் பொதுவாக தண்ணீரில் இருந்து தாவிக்குதித்துச் செல்வதைக் காணலாம். மேலும் இவை தாவிக் குதித்தபோது குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் படகுகளில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிகழ்வில் புளோரிடா கீசில் ஒரு பெண் இறந்தார். வலுவாடிகள் பல்வேறு வகையான சுறாக்களால் வேட்டையாடப்படுகிறது. இந்த மீன்கள் செம்பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இவை முக்கியமாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பிடிக்கப்படுகின்றன. இவை பெருந் தடுப்புப் பவளத்திட்டுப் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன.

வகைபிரித்தல்[தொகு]

வலுவாடிகளை முதன்முதலில் ஸ்வீடிஷ் தாவரவியலாளரான பெங்க்ட் ஆண்டர்ஸ் யூப்ரசான் 1790 ஆம் ஆண்டில் ராஜா நரினாரி என்று விவரித்தார். அவர் அண்டிலிசுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அறியப்படாத ஒரு இடத்தில் (அநேகமாக பிரேசிலின் கடற்கரை) சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியில் இருந்து, பின்னர் ஸ்டோஸோடான் நரினாரி என வகைப்படுத்தினார். [2] [3] இதன் தற்போதைய இனப் பெயரான Aetobatus என்பது, கிரேக்க சொற்களான aetos (eagle) மற்றும் batis (ray) என்பதிலிருந்து பெறப்பட்டது. வலுவாடிகளானது மயிலோபாடிடே குடும்பத்தைச் சேர்ந்தது, இதில் நன்கு அறியப்பட்ட மந்தா திருக்கையும் அடங்கும். மைலியோபாடிடே குடும்பத்தில் உள்ள பெரும்பாலான திருக்கைகள் கடலடி தரைக்கு அருகில் இருப்பதை விட பரந்த கடலில் நீந்துகின்றன. [3]

வலுவாடியானது வெள்ளை புள்ளிகள் கொண்ட கழுகு திருக்கை, பொன்னட் ஸ்கேட், பொன்னட் திருக்கை, வாத்துகல் திருக்கை புள்ளி வாத்து-பில் திருக்கை உள்ளிட்ட பல்வேறு பொதுவான பெயர்களைக் கொண்டுள்ளது. [4] [5] [6]

விளக்கம் மற்றும் நடத்தை[தொகு]

வலுவாடி மீன்களானது தட்டையான வட்டு வடிவ உடலமைப்பைக் கொண்டுள்ளன. கருநீல அல்லது கருப்பு நிற உடலைக் கொண்ட இவற்றின் உடலில் வெள்ளை புள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றின் அடிவயிறு வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் மூக்கானது வாத்தின் அலகு போன்று தட்டையாக இருக்கும். [7] இதற்கு பிற திருக்கைகளைவிட நீளமான வால் உண்டு. வாலில் 2-6 வரையிலான நச்சு முட்கள் இருக்கும். [3]

வளர்ந்த திருக்கைகள் 5 மீட்டர்கள் (16 அடி) நீளமும்; இறக்கைகளோடு சேர்த்து 3 மீட்டர்கள் (10 அடி) அகலமும், (10 மற்றும் 230 கிலோகிராம்கள் (507 lb) எடைவரை இருக்கும். [8]

இனப்பெருக்கம்[தொகு]

ஒரு ஆண் திருக்கையோ, சில நேரங்களில் பல ஆண் திருக்கைகளோ, ஒரு பெண் திருக்கையை பின்தொடரும். ஆண் மீனானது பெண் மீனை அணுகும்போது, ஆண் மீன் தனது மேல் தாடையைப் பயன்படுத்தி பெண் மீனின் முதுகுப் பகுதியை பிடிக்கிறது. உடம்பின் இருபுறமும் அமைந்துள்ள பக்கத் துடுப்புகளில் ஒன்றைப் பிடிப்பதன் மூலம் ஆண் பெண்ணை உருட்டிக் கொள்கிறது. ஆண் பெண் திருக்கையின் வயிற்றுடன் தன் உடலை இணைத்து, இரண்டு உடல்களின் கீழ்ப்பகுதிகளையும் ஒன்றாக இணைக்கிறது. இனச்சேர்க்கை செயல்முறை 30-90 வினாடிகள் வரை நீடிக்கும். [3]

பெண் வலுவாடி திருக்கையின் உயிற்றில் உள்பொரி முட்டை உருவாகிறது; முட்டைகள் பெண்ணின் உடலுக்குள்ளேயே குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் பிறக்கும் வரையில் அதற்கு தேவையான சத்து அதன் மஞ்சள் கருவில் இருந்து கிடைக்கும். [3] ஒரு ஆண்டு கர்ப்ப காலத்திற்கு பிறகு தாய் திருக்கை அதிகபட்சமாக நான்கு குட்டிகளை ஈன்றெடுக்கும். [1] குட்டிகள் முதலில் பிறக்கும்போது, அவற்றின் உடலானது 17–35 சென்டிமீட்டர்கள் (6.7–13.8 அங்) இருக்கும். [3] இந்தத் திருக்கைகள் 4 முதல் 6 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகின்றன. [1] [9]

உணவுப் பழக்கம்[தொகு]

இத்திருக்கைகள் சிப்பிகள், நண்டுகள், கடல் நத்தைகள் போன்ற மெல்லுடலிகள், ஓடுடலிகளை உணவாகக் கொள்கிறது. [10] [11] மேலும் ஹெர்மிட் நண்டுகள், [12] இறால், ஆக்டோபஸ்கள், சில சிறிய மீன்களையும் உணவாக கொள்கிறது. [13]

இத்திருக்கைகளுக்கு சிறப்பாக உள்ள செவ்ரான் வடிவ பல் அமைப்பு மொல்லுடலிகளின் கடினமான ஓடுகளை நசுக்கி உடைக்க உதவுகிறது. [8] இந்த திருக்கைகளின் உறுதியான தாடைகள் மெல்லுடலிகளின் ஓடுகளை உடைக்கத் தக்கதாக உள்ளது. [14] இவை கடலடி தரையில் உள்ள மணலில் தங்கள் மூக்கால் தோண்டும் தனித்துவமான நடத்தையைக் கொண்டுள்ளன. [15] இதைச் செய்யும்போது, மணல் படலம் திருக்கையை சூழ்ந்துவிடுகிறது. மேலும் வாயில் நுழையும் மணல் இதன் செவுள்கள் வழியாக வெளியேறுகிறது. ஆண் மற்றும் பெண்களின் உணவுப் பழக்கத்தில் அல்லது ஆஸ்திரேலியா மற்றும் தைவானின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்த திருக்கைகளில் வேறுபாடுகள் இல்லை என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. [11]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Dulvy, N.K., Carlson, J., Charvet, P., Bassos-Hull, K, Blanco-Parra, MP, Chartrain, E., Derrick, D., Dia, M., Diop, M., Doherty, P., Dossa, J., De Bruyne, G., Herman, K., Leurs, G.H.L., Mejía-Falla, P.A., Navia, A.F., Pacoureau, N., Pérez Jiménez, J.C., Pires, J.D., Seidu, I., Soares, A., Tamo, A., VanderWright, W.J. & Williams, A.B. 2021. Aetobatus narinari. The IUCN Red List of Threatened Species 2021: e.T42564343A2924463. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2021-1.RLTS.T42564343A2924463.en. Downloaded on 23 April 2021.
  2. 2.0 2.1 Kyne, Ishihara. "Aetobatus narinari". IUCN 2011. Archived from the original on 21 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 23 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Bester, Cathleen. "Ichthyology at the Florida Museum of Natural History". Florida Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  4. Fowler, Sarah L; Cavanagh, Rachael D (2005). "Species status report". Sharks, rays, chimaeras: The status of the Chondrichthyan fishes. UK: IUCN. பக். 354. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2-8317-0700-5. https://books.google.com/books?id=z6scNrsln2MC&pg=PA354. 
  5. Daley, R K; Stevens, J D. "Northern demersal species". Field guide to Australian sharks and rays. Australia: CSIRO Marine Research. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-876996-10-2. https://books.google.com/books?id=9yIPeavWykwC&pg=PA44. 
  6. Tee-Van 1953
  7. Australian Wildlife. "White-Spotted Eagle Ray". பார்க்கப்பட்ட நாள் 29 October 2011.
  8. 8.0 8.1 "Spotted Eagle Ray". Elasmodiver. 3 June 2007.
  9. "Fun facts about spotted eagle ray". Archived from the original on 2019-07-03. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  10. Bester, Cathleen. "Eagle Ray Spotted Eagle Ray Aetobatus narinari". பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  11. 11.0 11.1 Schluessel, Vera. "Life History, Population Genetics and Sensory Biology of the White Spotted Eagle Ray Aetobatus narinari (Euphrasen, 1790) with Emphasis on the Relative Importance of Olfaction". பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  12. Schluessel, V; Bennett, M. B.; Collin, S. P. "Diet and reproduction in the white-spotted eagle ray Aetobatus narinari from Queensland, Australia and the Penghu Islands, Taiwan". பார்க்கப்பட்ட நாள் 1 November 2011.
  13. SeaWorld; Discovery Cove; Busch Gardens. "Spotted Eagle Ray". Archived from the original on 19 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 1 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. Summers, Adam (2001). "Aetobatus narinari". Digital Morphology. பார்க்கப்பட்ட நாள் 1 November 2011.
  15. Silliman 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலுவாடி&oldid=3570967" இலிருந்து மீள்விக்கப்பட்டது