வலிமிகு மாதவிலக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வலிமிகு மாதவிலக்கு
ஒத்தசொற்கள்வலியுடன் கூடிய மாதவிடாய், சூதவலி
சிறப்புபெண்ணோயியல்
அறிகுறிகள்இடுப்பு வலி, அடி வயிற்றில் வலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு[1][2]
வழமையான தொடக்கம்பூப்படைந்து ஓர் ஆண்டு காலம்[1]
கால அளவுமூன்று நாட்கள் மிகாமல்[1]
காரணங்கள்எந்த நோய் காரணமும் இல்லை, கருப்பை நார்த்திசுக் கட்டி, அடினோமயோசிஸ் , இடமகல் கருப்பை அகப்படலம்[3]
நோயறிதல்இடுப்பு பகுதி ஆய்வு, மீயொலி [1]
ஒத்த நிலைமைகள்வேற்றிடச்சூல், இடுப்பு அழற்சி நோய், இன்டர்ஸ்டீடியல் சிஸ்டிடிஸ், நாள்பட்ட இடுப்பு வலி [1]
சிகிச்சைஒத்தடம், வலி நீக்கும் மருந்து[3]
மருந்துஅழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் such as ஐப்யூபுரூஃபன், ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாடு, புரோஜெஸ்டோஜனுடன் IUD [1][3]
முன்கணிப்புOften improves with age[2]
நிகழும் வீதம்20–90% (15-32 வயதுடைய பெண்கள்)[1][3]

வலிமிகு மாதவிலக்கு என்பது மாதவிலக்கின் தொடக்க காலத்தில் ஏற்படும் வலி மிகுதியான ஒரு அசதாரண உடல் செயல் ஆகும். இது பொதுவாக மூன்று நாட்கள் கழித்து வலியானது குறையும்.[2] வலியானது இடுப்பு பகுதி அல்லது அடி வயிற்று பகுதிகளில் ஏற்படும். முதுகு வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் சில நேரங்களில் ஏற்படும்.

பொதுவாக இளம் பெண்களுக்கு எந்த ஒரு நோய் தாக்கம் இல்லாமலேயே வலிமிகு மாதவிலக்கு ஏற்படுகிறது.[3][4] ஆனால் வயது முதிர்ந்த பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக் கட்டி, இடமகல் கருப்பை அகப்படலம் மற்றும் கருப்பை உட்சுவர் தடிப்பு போன்ற குறைப்படுகளால்[3] ஏற்படுகின்றது. வலிமிகு மாதவிலக்கு என்ற உடற்செயல் குறைபாடு மாதவிடாய் மிகைப்பு, சீரற்ற மாதவிடாய், 12 ஆம் வயது நிறைவு முன்பே பூப்பெய்தியவர்கள் மற்றும் உடல் எடை குறைவானவர்களுக்கு ஏற்படுகிறது[1]. ஒத்த நோய் அறிகுறிகள் கொண்ட வேற்றிடச்சூல், இடுப்பு அழற்சி நோய், சிறுநீரக பை வலி நோய் மற்றும் நாள்பட்ட இடுப்பு வலி முதலிய நோய்களில் இருந்து வேறுபட்டு உள்ளதை அறிந்துகொள்ள இடுப்பு பகுதி ஆய்வு மற்றும் மீயொலி மூலம் குறைபாடுகள், நோயின் தாக்கம் மற்றும் காரணங்களை கண்டறியமுடியும்.[1] வலிமிகு மாதவிலக்கு பொதுவாக சரியான உடல் உழைப்பு, சரியான காலகட்டத்தில் மக்கட்பேறு அடைந்த நபர்களுக்கு வருவதில்லை.[1] இதற்கான வைத்திய முறைகளாக ஒத்தடம் கொடுப்பது, வலி நிவாரண மருந்துகள், நாளமில்லா சுரப்பிகளின் உயிர் கிரியா ஊக்கி உட்சுரப்பு நீர் எனும் ஹார்மோன்கள் கொடுப்பது ஆகும்.[1][3][3]அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள், ஐப்யூபுரூஃபன், உயிர்ச்சத்து பி, மக்னீசியம் முதலியவற்றை எடுத்துக்கொள்வதால் வலி குறையும்.[2] யோகா, குத்தூசி மருத்துவம் மற்றும் உடற்பிடிப்பு செய்வதால் ஓரளவுக்கு வலியை குறைக்கலாம். கருப்பை நோய்கள் காரணமாக உண்டாகும் வலிமிகு மாதவிலக்கு அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யலாயம்.[1][2] 20% முதல் 90% வரை வலிமிகு மாதவிலக்கால் பாதிப்பு 15 முதல் 32 வயதுள்ள பெண்களே ஆவர்.[1][4] இது ஒரு பொதுவான மாதவிடாய் மருத்துவ உடல் செயல் ஆகும்.[2] தோராயமாக பூப்படைந்து ஓர் ஆண்டு காலம் முதல் மக்கட்பேறு அடையும் வரை மாதவிலக்கு காலங்களில் எந்த ஒரு நோய் தாக்கம் இன்றி வலியுடன் ஏற்படும் மாதவிலக்கு ஆகும்.[1] குழந்தை பிறப்பிற்கு பின் வலிமிகு மாதவிலக்கின் தாக்கம் குறையும்.[2]

நோய் காரணிகள்[தொகு]

வலிமிகு மாதவிலக்கு கருப்பை நோய் தாக்கத்தின் அடிப்படையில் இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது. அவைகள் முறையே முதன்மை வலிமிகு மாதவிலக்கு இது எந்த நோய் தாக்கம் இல்லாமலும் மற்றும் இரண்டாம் நிலை வலிமிகு மாதவிலக்கு கருப்பை அல்லது இனப்பெருக்க மண்டல உடல் உறுப்புகளின் நோய் தாக்கத்தினால் ஏற்படுவதாகும்.[5]

பொதுவாக இரண்டாம் நிலை வலிமிகு மாதவிலக்கு கருப்பை அகப்படல நோய் தாக்கத்தால் ஏற்படுகிறது என்பதை லப்பிரச்கொப்பி மூலம் கண்கூடாக அறியலாம். 70% இளம் பெண்களுக்கு இந்தவகையான வலிமிகு மாதவிலக்கு ஏற்படுகிறது.[6]

இரண்டாம் நிலை வலிமிகு மாதவிலக்கின் மற்ற கரணிகளாக கருப்பை உட்சதை கட்டிகள்,[7] கருப்பை உட்சதை வீக்கம்,[8] சூல்பை நீர்க்கட்டிகள் மற்றும் இடுப்பு இரத்த நாள குறைபாடு போன்ற மருத்துவ குறைபாடுகள் அமைகிறது.[9]

கால் உயர சமநிலை இன்மையால் இடுப்பு பகுதி ஒருபுறம் சாய்வாக இருக்கும் இதனால் இடுப்பு வலி ஏற்படும்.[10] இந்த வலியை மாதவிடாய் காலங்களில் தவறுதலாக வலிமிகு மாதவிலக்கு என சில நேரங்களில் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. இதை போல தசை எலும்பு மண்டல குறைப்படகளான கூனு முதலிய மருத்துவ நிலைகளில் தவறுதலாக வலிமிகு மாதவிலக்கு என புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.

நோயின் அறிகுறிகள்[தொகு]

நோய் கண்டறிதல்[தொகு]

மருத்துவம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 "Diagnosis and initial management of dysmenorrhea". American Family Physician 89 (5): 341–6. March 2014. பப்மெட்:24695505. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "FAQ046 Dynsmenorrhea: Painful Periods" (Jan 2015). மூல முகவரியிலிருந்து 27 June 2015 அன்று பரணிடப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "Menstruation and the menstrual cycle fact sheet" (December 23, 2014). மூல முகவரியிலிருந்து 26 June 2015 அன்று பரணிடப்பட்டது.
  4. 4.0 4.1 "Dysmenorrhea and Endometriosis in the Adolescent". American College of Obstetricians and Gynecologists (20 November 2018). பார்த்த நாள் 21 November 2018.
  5. "Period Pain". National Library of Medicine (March 1, 2018).
  6. "Prevalence of endometriosis diagnosed by laparoscopy in adolescents with dysmenorrhea or chronic pelvic pain: a systematic review". Human Reproduction Update 19 (5): 570–82. 2013. doi:10.1093/humupd/dmt016. பப்மெட்:23727940. 
  7. "Action of aromatase inhibitor for treatment of uterine leiomyoma in perimenopausal patients". Fertility and Sterility 91 (1): 240–3. January 2009. doi:10.1016/j.fertnstert.2007.11.006. பப்மெட்:18249392. 
  8. "Successful total laparoscopic cystic adenomyomectomy after unsuccessful open surgery using transtrocar ultrasonographic guiding". Journal of Minimally Invasive Gynecology 15 (2): 227–30. 2008. doi:10.1016/j.jmig.2007.10.007. பப்மெட்:18312998. 
  9. Hacker, Neville F., J. George Moore, and Joseph C. Gambone. Essentials of Obstetrics and Gynecology, 4th ed. Elsevier Saunders, 2004. ISBN 0-7216-0179-0[page needed]
  10. "The relationship between pelvic torsion and anatomical leg length inequality: a review of the literature". Journal of Chiropractic Medicine 8 (3): 107–18. September 2009. doi:10.1016/j.jcm.2009.06.001. பப்மெட்:19703666. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலிமிகு_மாதவிலக்கு&oldid=3186661" இருந்து மீள்விக்கப்பட்டது