உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வலிகாமம் தெற்கு
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாண மாவட்டம்
நேர வலயம்இலங்கை தர நேரம் (ஒசநே+5:30)

வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு (Valikamam South Divisional Secretariat) அல்லது உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. உடுவில், சுன்னாகம், சங்குவேலி, கந்தரோடை, ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குப்பிளான், ஈவினை, இணுவில், தாவடி ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவும் அமைத்துள்ளன.

இப்பிரிவு 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆகும்[1].

முகவரி[தொகு]

வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம், உடுவில் கிழக்கு, சுன்னாகம், இலங்கை

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]