வலிகாமம் கல்வி வலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வலிகாமம் கல்வி வலயம் (Valikamam educational zone) இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் ஓர் கல்வி வலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் காணப்படும் 12 கல்வி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.[1] இக்கல்வி வலயம் தனக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளைப் பரிபாலித்தல், நிவகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பரீட்சைகள் நடாத்துதல், ஆசிரியர், அதிபர்களை நியமித்தல் போன்ற செயற்பாடுகளையும் இக்கல்வி வலயமே மேற்கொண்டு வருகின்றது. இப்போது இக்கல்வி வலயத்தின் பணிப்பாளர் திருமதி பி. செல்வின் இறேனியஸ் ஆவார். மேலும் இதன் நிர்வாக செயற்பாடுகளை இலகுவாக்கும் பொருட்டு சங்கானை, சண்டிலிப்பாய், உடுவில், தெல்லிப்பளை என நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "It works under the Ministry of Education, Sri Lanka". பார்த்த நாள் 8 December 2016.
  2. "Map of zone". பார்த்த நாள் 8 December 2016.
  3. "கோட்டங்கள் பிரிப்பு". பார்த்த நாள் 8 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலிகாமம்_கல்வி_வலயம்&oldid=2796760" இருந்து மீள்விக்கப்பட்டது