உள்ளடக்கத்துக்குச் செல்

வலவம் திமிங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Globicephala|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
வலவம் திமிங்கலம்
புதைப்படிவ காலம்:Pliocene to recent
ஒரு சராசரி மனிதனுடன் ஒப்பிடுகையில் குறுந்துடுப்பு வலவம் திமிங்கலத்தின் அளவு
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Globicephala
Species

குறுந்துடுப்பு வலவம் திமிங்கிலம்
Globicephala melas

     குறுந்துடுப்பு வலவம் திமிங்கிலம் வாழும் பகுதி     நீண்ட துடுப்பு வலவம் திமிங்கிலம் வாழும் பகுதி     இரண்டு இனங்களும் காணப்படும் பகுதி

வலவம் ஓங்கல் அல்லது வலவம் திமிங்கலம் (Pilot whale) என்பது குளோபிசெபலா எனும் கடற்பாலூட்டி பேரினத்தினைச் சார்ந்தது. இவை ஓங்கல் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் இவற்றின் பேருருவத்தின் காரணமாக திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. அவை நீண்ட துடுப்பு வலவம் திமிங்கிலம் மற்றும் குறுந்துடுப்பு வலவம் திமிங்கிலம் என்பனவாகும். இரண்டையும் கடலில் காணும்போது எளிதில் வேறுபாடு தெரிவதில்லை. மேலும் மண்டை ஓடுகளின் பகுப்பாய்வானது இந்த உயிரினங்களை வேறுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும். இவை கிட்டத்தட்ட உலகெங்கிலும் உள்ளன. நீண்ட துடுப்பு வலவம் திமிங்கலங்கள் குளிர்ந்த நீரில் வாழ்கின்றன. குறுந்துடுப்பு வலவம் திமிங்கலங்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடலில் வாழ்கின்றன. வலவம் திமிங்கலங்கள் கடல் ஓங்கில்களில் மிகப்பெரியவையான ஓர்க்கா திமிங்கிலத்துக்கு அடுத்து, இவை இரண்டாவது பெரிய ஓங்கல் ஆகும். இவையும் ஓங்கல் குடும்பத்தின் மற்ற பெரிய உறுப்பினர்களும் பிளாக்ஃபிஷ் என்றும் அழைக்கப்படுகிறன.

வலவம் ஓங்கல் முதன்மையாக கணவாய்களை உணவாக கொள்கின்றன. ஆனால் இவை காட் மற்றும் டர்போட் போன்ற பெரிய கொழுப்புகுறை மீன் வகைகளையும் வேட்டையாடும். இவை ஒரு சமூகமாக வாழக்கூடியவை. இவை தங்கள் வாழ்நாள் முழுவதும் தாங்கள் பிறந்த குடும்பத்துடன் வாழ்பவை. இவற்றின் குடும்பங்கள் தாய்வழி சமூகமாகும். குடும்பத்துக்கு, கூட்டத்துக்கு தாயே தலைமை வகிக்கின்றது. வலவம் திமிங்கிலங்கள் அவ்வப்போது கூட்டமாக கரை ஒதுங்கி தத்தளிக்கக்கும். ஆனால் இதற்கான காரணம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. குட்டைத் துடுப்பு திமிங்கிலம் மற்றும் நீண்ட-துடுப்பு திமிங்கிலங்களின் காப்பு நிலையானது தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

பெயரிடுதல்

[தொகு]

இந்த விலங்குகளுக்கு "பைலட் திமிங்கலங்கள்" என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஓங்கல் கூட்டத்தை தலைமைப் பொறுப்பில் உள்ள ஒரு ஒங்கல் "பைலட்" போல வழிநடத்துவதாக நம்பப்பட்டது. [2] [3] இந்த ஓங்கல்கள் "பொட்ஹெட் திமிங்கலங்கள்" மற்றும் "பிளாக்ஃபிஷ்" என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இனத்தின் பெயர் லத்தீன் வார்த்தையான குளோபஸ் ("உருண்டை பந்து" அல்லது "குளோப்") மற்றும் கிரேக்க சொல்லான கெஃபாலே ("தலை") ஆகியவற்றின் கலவையாகும். [2] [3]

விளக்கம்

[தொகு]
நீண்ட துடுப்பு வலவம் திமிங்கல எலும்புக்கூடு

வலவம் திமிங்கள் பெரும்பாலும் அடர் சாம்பல், பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் முதுகுத் துடுப்புக்கு பின்னால் ஒரு சாம்பல் நிற சேணம் போன்ற சில வெளிர் பகுதிகள் உள்ளன. [3] மற்ற வெளிர் பகுதிகளாக கன்னத்தின் கீழ் நங்கூர வடிவ திட்டு, கண்ணுக்குப் பின்னால் ஒரு மங்கலான திட்டு, வயிற்றில் பெரிய குறி போன்றவை உள்ளன. [3] இவறின் முதுகுத் துடுப்பு பின்னோக்கி வளைந்தததாக உடலின் முன்பக்கத்தில் அமைந்துள்ளது. வலவம் திமிங்கலமானது பெரும்பாலான ஒங்கல்களை விட வலிமையானது. மேலும் இதன் நெற்றியில் ஒரு தனித்துவமான கொழுப்பு திசுக்களாளான முலாம்பழம் போன்ற திரட்சி உள்ளது. [3]

ஒரு பைலட் திமிங்கலம் ஸ்பைஹாப்பிங்

நீண்ட துடுப்பு மற்றும் குறுகிய துடுப்பு வலவம் திமிங்கலங்கள் தோற்றத்தில் மிகவும் ஒத்தவையாக உள்ளன. இரண்டு இனங்களை வேறுபடுத்துவதி சாராதரணமாக காண்பது கடினம். [2] உயிரியலாளர்கள் இந்த இரண்டு இனங்களையும் வேறுபடுத்துவதற்கு இவற்றின் மண்டையில் உள்ள வேறுபாடுகளைக் கொண்டே அறிகின்றனர். [2] [3]

நீளத் துடுப்பு வலவம் திமிங்கலங்கள் பொதுவாக சிறிய துடுப்பு வலவம் திமிங்கலங்களை விட பெரியதாக இருப்பதால், அளவு மற்றும் எடை வேறுபடுகின்றன. [4] [5] இந்த இரண்டு இனங்களிலும் இவற்றின் ஆயுட்காலமானது ஆண்களுக்கு 45 ஆண்டுகள் என்றும் பெண்களில் 60 ஆண்டுகள் என உள்ளது. இரண்டு இனங்களும் பால் ஈருருமையை கொண்டுள்ளன. நீளத் துடுப்பு வலவம் திமிங்கலங்களில் வயதுக்கு வந்த திமிங்கலங்களின் உடல் நீளமானது தோராயமாக 6.5 மீ வரை அடையும், ஆண்களை விட பெண்களின் நீளம் 1 மீ. குறைவாக இருக்கும். [6] ஆண்களின் உடல் எடை 1,300 கி.கிராம் வரையும், பெண்கள் 2,300 கி.கி வரை எட்டும். [7] சிறிய துடுப்பு வலவன் திமிங்கலங்களில், வயது வந்த பெண்கள் திமிங்கிலங்களின் உடல் சுமார் 5.5 மீ நீளம்வரை வளர்கின்றன. அதே நேரத்தில் ஆண்கள் 7.2 மீ நீளமும், 3,200 கி.கி வரை எடையுள்ளதாக இருக்கலாம். [7]

குறிப்புகள்

[தொகு]
  1. Minton, G., Braulik, G. & Reeves, R. 2018. Globicephala macrorhynchus. The IUCN Red List of Threatened Species 2018: e.T9249A50355227. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2018-2.RLTS.T9249A50355227.en. Downloaded on 18 December 2018.
  2. 2.0 2.1 2.2 2.3 Olson, P.A. (2008) "Pilot whale Globicephala melas and G. muerorhynchus" pp. 847–52 in Encyclopedia of Marine Mammals, Perrin, W. F., Wursig, B., and Thewissen, J. G. M. (eds.), Academic Press; 2nd edition, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-551340-2ISBN 0-12-551340-2
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Ridgway, S. H. (1998). Handbook of Marine Mammals: The second book of dolphins and the porpoises, Volume 6, Elsevier. pp. 245–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-588506-7ISBN 0-12-588506-7
  4. Yonekura, M., Matsui, S. & Kasuya, T. (1980). "On the external characters of Globicephala macrorhynchus off Taiji, Pacific coast of Japan". Sci. Rep. Inst 32: 67–95. பன்னாட்டுத் தர தொடர் எண்:0083-9086. 
  5. Kasuya, T., Marsh, H. (1984). "Life history and reproductive biology of the short-finned pilot whale, Globicephala macrorhynchus, off the Pacific Coast Japan". Rep. Int. Whal. Comm. 6: 259–310. http://www.helenemarsh.com/publications/JournalPapers/1984/KasuyaMarshLifeReproPilot1984.pdf. பார்த்த நாள்: 2021-10-09. 
  6. "Age and growth parameters of the long-finned pilot whale off the Faroe Islands". Rep. Int. Whal. Comm. 14: 163–208. 1993. 
  7. 7.0 7.1 Jefferson, T. A, Webber, M. A., Pitman, R. L., (2008) Marine mammals of the world. Elsevier, Amsterdam.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலவம்_திமிங்கலம்&oldid=3296381" இலிருந்து மீள்விக்கப்பட்டது