வலசை வரும் உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வலசை வரும் உள்ளான்
புதைப்படிவ காலம்:Late Oligocene to recent
நீண்ட கால்களையுடைய சிறகய பறவை நீர்நிலை விளிம்பின் அருகில்.
வலசை வரும் உள்ளான் (Calidris pusilla)
உயிரியல் வகைப்பாடு
திணை: அனிமேலியா
தொகுதி: கோடற்றா
வகுப்பு: ஆவேஸ்
வரிசை: கறட்றிபோரம்ஸ்
உப வரிசை
  • கறட்ரி
  • சியோனிடி
  • ஸ்கொலோபசி
  • தினோகரி
Flock of birds on a beach
கடற்கரையில் உயர் அலையில் கூட வேட்டைமாடும் வலசை வரும் உள்ளான்கள்
Flock of birds in flight above a rocky beach
பறக்கும் வலசை வரும் உள்ளான்
refer to caption
நீர் நிலை கரையின் மேல் நிற்கும் பொதுவான வலசை வரும் உள்ளான்

வலசை வரும் உள்ளான்கள் பொதுவாக கரையோரங்கள், ஈரத்தரைகள் ஆகியவற்றில் காணப்படும். இவ்வகைப்பறவைகள் சிரமப்பட்டு சேறு மற்றும் மணல்நிலங்களில் தனது உணவை( பூச்சிகள், ஓட்டுமீன்கள்) பெற்றுக்கொள்ளும். வட அமெரிக்காவில் இப்பறவைகள் கரையோரப்பறவைகள் என அழைக்கப்படும்.

வலசை வரும் உள்ளான்களில் 210 இனங்கள் உண்டு.[1] இப்பறவைகள் பெரும்பாலும் ஈரநிலங்கள் மற்றும் கரையோரச்சூழலில் வாழும். ஆர்டிக் மற்றும் வெப்பபகுதிகளிலும் வாழும் இப் பறவையினங்களில் பெரும்பாலானவை குறிப்பிட்ட காலங்களில் இடம்பெயர்கின்றனவையாகும். வெப்ப மண்டல பிரதேசங்களில் வாழும் சில பறவையினங்கள் அப்பகுதியில் நிரந்தரமாக வாழ்பவையாகவும் அல்லது மழைவீழ்ச்சிக்கு ஏற்றாற்போல இடம்பெயர்பவையாகவோ இருக்கலாம். ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழும் இப்பறவையின் சில இனங்கள் அதிக தூரத்திற்கு குடிபெயர்வையாகவும், இவைகள் தெற்கு அரைக்கோளத்தில் தனது இனப்பெருக்கமற்ற காலத்தை களிப்பதற்றனகாக குடிபெயரும்.

இயல்புகள்[தொகு]

இப்பறவைகள் நீர்ப்பறவைகள் என அழைக்கப்படுவதற்கான காரணம் இப்பறவையின் பல இனங்கள் நீர் நிலைகளை அண்மித்த பிரதேசங்களில் வாழும். இப்பறவைகள் நீர் நிலைகளில் நடப்பதற்கு ஏதுவாற் போல இவற்றின் கால்கள் மிக நீளமானதாக அமைந்து காணப்படும். சில இனங்களுக்கு சேறு மற்றும் பாறைகளின் அமைவிடம் தெரிந்து காணப்படும். இனப்பெருக்க காலத்திற்கு முன் குடிபெயரும். மேலும் இவ்வினப்பறவைகள் நீளமான இறக்கைகளை கொண்டு காணப்படும். மேலும் இப்பறவைகள் குடிபெயர்வதற்கு தேவையான சக்தியை பெறுவதற்கு போதுமான அநுசேபத்தையும் கொண்டு காணப்படும்.[2]

இப்பறவைகளில் பெரும்பாலான பறவைகள் முள்ளந்தண்டிலிகளை மணலில் இருந்தோ அல்லது சேற்றில் இருந்தோ பிடித்து உண்ணும். இப்பறவைகளின்  பெரும்பாலானவற்றின் அலகு முடிவிடங்கள் அதிகளவு நரம்பு இணைப்புகளை கொண்டிருக்கும். இதனால் இவை இலகுவாக உணவுகளை சேற்றில் இருந்து கண்டுபிடித்து உண்ணும். எனினும் பெரும்பாலான பறவையினங்கள் பூச்சிகள் மற்றும் சிறிய ஊர்வனவற்றை உணவாக உட்கொள்ளும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. G.C. Boere, C.A. Galbraith and D.A. Stroud (2006). "Waterbirds around the world".
  2. "Explore the World With Shorebirds." U.S. Fish and Wildlife Service, 1 Aug. 2004. Web.<http://www.fws.gov/alaska/external/education/pdf/Chap4.pdf>.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலசை_வரும்_உள்ளான்&oldid=2941041" இருந்து மீள்விக்கப்பட்டது