உள்ளடக்கத்துக்குச் செல்

வறள் நிலத் தாவரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்பாத்திக் கள்ளி
யூஃபோா்பியா

வறள் நிலத் தாவரங்கள் (Xerophytes) எனப்படுபவை வறண்ட மணற்பாங்கான இடங்களில் வளரும் தாவரங்கள் ஆகும். இவைகளைப் பாலைவனத் தாவரங்கள் என்றும் அழைக்கலாம். அதிக வெப்பநிலை, ஒளிச்செறிவு, காற்றுவீச்சு மற்றும் குறைந்த நீா் ஆகியவைகளை இத்தாவரங்கள் எதிா்கொள்கின்றன.[1]

இத்தாவரங்கள் பாலைவனம் போன்ற குறைவான மழையினால், எங்கு நீா் தட்டுப்பாடு இருக்கிறதோ, அங்கு வாழ்கின்றன. இங்கு காற்று உலா்ந்தும், அதிக வெப்பத்துடனும் இருக்கும். சூாிய ஒளியின் அடா்த்தியும் அதிகமாக இருக்கும். பாலைவனத் தாவரங்களின் முக்கிய தேவை நீரை உறிஞ்சி சேமிப்பதாகும். இவ்வகைத் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டாக சப்பாத்திக் கள்ளி, சவுக்கு, யூஃபோா்பியா, ஆஸ்பராகஸ், அரளி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

வறள் நிலத்தாவரங்கள் இத்தகைய நீர்-தட்டுப்பாட்டுச் சூழ்நிலைகளில் உயிர்வாழ்வதற்கான சிறப்புத் தகவமைப்புகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இவை தங்களுடைய சொந்த சேமிப்பிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்தலாம், குறிப்பாக புதிய திசு வளர்ச்சியின் தளங்களுக்கு தண்ணீரை ஒதுக்கவோ அல்லது வளிமண்டலத்திற்கு குறைந்த நீரை இழக்கவோ தகவமைப்பைப் பெற்றுள்ளன. அதனால் மண்ணில் இருந்து குறைந்த விகிதத்தில் நீரை அனுப்புவதற்கும் ஒளிச்சேர்க்கை மற்றும் வளர்ச்சிக்காகவும் குறைந்த அளவில் நீரைப் பயன்படுத்தும் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. வெவ்வேறு தாவர இனங்கள் நீர் விநியோகத்தை நிர்வகிப்பதற்கான வெவ்வேறு குணங்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன, இத்தகவமைப்புகளே அவை உயிர்வாழ உதவுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. ” Xeromorphic”, The Cambridge Illustrated Glossary of Botanical Terms, Michael Hickey, Clive King, Cambridge University Press, 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=வறள்_நிலத்_தாவரங்கள்&oldid=3918567" இலிருந்து மீள்விக்கப்பட்டது