வறடிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வறடிக்கல் என்பது மகப்பேறு அளிக்கக்கூடிய கல்லாக இந்து சமய மக்களால் நம்பப் படுகின்ற கல்லாகும். [1] இந்தக் கல்லினை வந்திய - பாடாணம் என்று வடமொழியில் குறிப்பிடுகின்றனர்.[1] [2]

திருச்செங்கோடு மலையில் இந்த வறடிக்கல் அமைந்துள்ளது.[1] மலையின் உச்சியில் அமைந்திருக்கும் இந்தக் கல்லினை முறையாக மூன்று முறை வலம் வருதல் வேண்டும். கல்லானது ஒருபுறம் மலையினையும், மற்றொருபுறம் பள்ளத்தாக்கினையும் கொண்டதாக அமைந்துள்ளது. கல்லினை உடலோடுப் பொருத்தி கல்லினை சுற்ற வைக்க வேண்டும். அப்போது சுற்றுகின்றவர் பள்ளத்தாக்கு இருக்கும் பகுதியில் கல்லினைப் பிடிமானமாகக் கொண்டு சென்று வருவர். இவ்வாறு வலம் வருதலின் போது பெண்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊடகங்களில்[தொகு]

இந்த வறடிக்கல் குறித்தான செய்தியுடன் பெருமாள் முருகன் என்பவரின் மாதொருபாகன் என்ற நாவல் வெளிவந்துள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ":: TVU ::".
  2. http://www.tamilvu.org/slet/l4100/l4100uri.jsp?song_no=2238&book_id=120&head_id=7&sub_id=1484

வெளி இணைப்புகள்[தொகு]

[]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வறடிக்கல்&oldid=2118355" இலிருந்து மீள்விக்கப்பட்டது