உள்ளடக்கத்துக்குச் செல்

வர்ஷம் (2004 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்ஷம்
இயக்கம்சோபன்
தயாரிப்புஎம். எஸ். ராஜூ
கதைவீருபொட்லா
திரைக்கதைசோபன்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புபிரபாஸ்
திரிஷா
கோபிசந்த்
ஒளிப்பதிவுஎஸ். கோபால் ரெட்டி
படத்தொகுப்புகோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்
கலையகம்சுமந்த ஆர்ட் புரடக்சன்சு
வெளியீடுசனவரி 14, 2004 (2004-01-14)
ஓட்டம்159 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

வர்ஷம் (Varsham ) என்பது 2004-ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தெலுங்கு மொழிக் காதல் அதிரடித் திரைப்படமாகும். சோபன் இயக்கிய இத்திரைப்படத்தை சுமந்த் ஆர்ட் புரொடக்சன்சுப் பதாகையின் கீழ் எம். எஸ். ராஜூ தயாரித்தார். இப்படத்தில் பிரபாஸ், திரிஷா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். கோபிசந்த், பிரகாஷ் ராஜ், பருச்சூரி வெங்கடேஸ்வரா ராவ், சந்திர மோகன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படத்திற்கு எஸ். கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்தார்.

இத்திரைப்படம் தமிழில் சிங்கமகன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1] இத்திரைப்படத்தின் வெற்றி தமிழில் மழை (2005) என்றும் இந்தியில் பாகி (2016) என்றும் மறு ஆக்கம் செய்ய வழிவகுத்தது.[2]

கதைச் சுருக்கம்

[தொகு]

வெங்கட் என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். மழையை மிகவும் விரும்பும் அவர், ஒரு நாள் சைலஜா என்ற இளம்பெண்ணை சந்தித்துக் காதலிக்கிறார். ஆரம்பத்தில் சைலஜா அவரை தவிர்க்க முயன்றாலும், பின்னர் அவரது அன்பும் நேர்மையும் கண்டு அவரை விரும்பத் தொடங்குகிறாள். ஆனால் சைலஜாவை சக்திவாய்ந்த நிலக்கரி தொழிலதிபரான பத்ரா தனது வசப்படுத்த முயல்கிறான். அவன் கொடூரமான குணமுடையவனாக இருந்து, தனது விருப்பத்திற்கு எதிராக யாரும் நடக்கக் கூடாது என்று நினைக்கிறான்.

சைலஜா வெங்கட்டை காதலிப்பதை அறிந்த பத்ரா கோபமடைந்து, வெங்கட்டையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டத் தொடங்குகிறான். இதனால் வெங்கட் மற்றும் பத்ரா இடையே கடுமையான மோதல் உருவாகிறது. பத்ராவின் ஆட்கள் வெங்கட்டை பலமுறை தாக்க முயன்றாலும், அவர் துணிச்சலுடன் எதிர்க்கிறார். சைலஜாவும் தனது குடும்ப அழுத்தங்களை மீறி வெங்கட்டுடன் நிற்க முடிவு செய்கிறாள்.வெங்கட் மற்றும் சைலஜா மீண்டும் இணைகிறார்கள்.

நடிகர்கள்

[தொகு]
  • பிரபாஸ் – வெங்கட்
  • திரிஷா – சைலஜா
  • கோபிச்சந்த் – பத்ரா
  • பிரகாஷ் ராஜ் – ரத்னம்
  • சுனில் – ஜோக்கர்
  • பருசூரி வெங்கடேஸ்வர ராவ்
  • சந்திர மோகன்
  • அஜய்
  • ராஜா ரவீந்திரா
  • தர்மவரப்பு சுப்பிரமணியம்
  • எம். எஸ். நாராயணா
  • கிருஷ்ண பகவான்
  • நர்சிங் யாதவ்
  • ஜெயபிரகாஷ் ரெட்டி
  • வேணு மாதவ்
  • சனா
  • ஹேமா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Friday Fury – April 27". Sify. 27 April 2012. Archived from the original on 29 April 2012. Retrieved 18 August 2012.
  2. Menon, Thinkal (12 November 2022). "Trisha's elated at the re-release of her Telugu debut Varsham, says films are forever and thanks fans". OTT Play.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ஷம்_(2004_திரைப்படம்)&oldid=4549492" இலிருந்து மீள்விக்கப்பட்டது