உள்ளடக்கத்துக்குச் செல்

வர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வர்மம் அல்லது அழுத்துமிடம் (மர்மம் எனவும் அறியப்படும்) என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். இந்த அறிவைப் பெற்றிருப்பதன் மூலம் சிகிச்சை அளிக்கவோ அல்லது தற்காப்புக் கலையாகவோ பயன்படுத்தலாம்.

வர்மம் வரலாறு

[தொகு]
வர்ம புள்ளிகள்

வர்மம் என்ற சொல்லுக்கு ‘உயிர்-ஆற்றல் பற்றிய அறிவியல் எனப்பொருள். இது 5000 ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவ முறையாகும். இது லெமுரியா கண்டம் எனப்படும் குமரிக் கண்டத்தில் தோன்றிய மருத்துவமாகும். ஆதலால் வர்மமே மருத்துவ முறைகளுக்கு முன்னோடியாக உள்ளது எனக்கூறலாம். ஏனெனில் லெமுரியா கண்டத்திலேயே முதல் உயிர் தோன்றியதாக அறிவியலாளர்கள் சான்று பகர்கின்றனர். லெமுரியர்கள் எனும் தமிழர்கள் நாகரீகத்தின் உச்சத்தி-ருந்த காலக்கட்டத்தில் கடற்கோளால் லெமுரியா எனும் குமரிக்கண்டம் அழிந்துபட, மீதமுள்ள துணிக்கையான குமரி மண்ணில் விட்டுச்செல்லப்பட்ட மருத்துவமே வர்ம மருத்துவமாகும்.

வர்ம மருத்துவ அறிவியல் தமிழ் மொழியிலேயே தோன்றியது. வர்ம மருத்துவமே மிகப்பழமை வாய்ந்த இந்திய முறை மருத்துவமாகும். இது ஆதிசித்தன் சிவனால் தோற்றுவிக்கப்பட்டு, அகத்தியர் மற்றும் போகர் போன்ற சித்தர்களால் வளர்க்கப்பட்டது. பின்னர் பல தமிழ் சான்றோர்களால் மருத்துவமாக கையாளப்பட்டு வந்துள்ளது. இவர்களெல்லாம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்த லெமுரிய வழித்தோன்றல்களாக வந்த தமிழர்களாவர். தமிழ் பாரம்பரிய மருத்துவமான வர்ம மருத்துவத்தை தமிழர்கள் மருத்துவமாக மட்டுமன்றி, தற்காப்புக் கலையாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மனிதன் தாவர, வேதியியல் மற்றும் விலங்கின சரக்குகளை மருத்துவத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்த காலத்துக்கு முன்னதாகவே, கை விரல்களால் பரிகாரம் தேடிக் கொண்ட ‘கை-மருத்துவம்’வர்மமேயாகும். வர்ம மருத்துவமே மிகப்பழமை வாய்ந்த மருத்துவம் எனக்கூற நமக்கு இதைப்போன்ற பல காரணங்கள் உண்டு. காலப்போக்கில் வர்மமருத்துவமும் பல மூ-கை-தாது-சீவக மருந்துகளை தன்னகத்தே ஏற்றுக்கொண்டு, தனக்கே உரித்தான உறுதியான பல அடிப்படைக் கொள்கைகளையும் தன்னகத்தே ஏற்படுத்திக் கொண்டது. பின்னாட்களில் பல அக மற்றும் புற மருந்துகளை தனதாக்கி ‘வர்ம முறை மருத்துவம்’ எனத்தனித்துவமாக வளர்ந்துள்ளது. இந்திய முறை மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா மருத்துவங்களை காட்டிலும் காலத்தால் தொன்மையானதாகையால் இதுவே ‘முதல் இந்திய மருத்துவம்’ எனக் கணிக்க இடமுண்டு.

மனித உடலில் 108 அழுத்துமிடங்கள் அல்லது வர்மங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

வர்மங்கள் மனித உடல் பகுதி
25 தலை முதல் கழுத்து வரை
45 கழுத்து முதல் தொப்பூழ் வரை
9 தொப்பூழ் முதல் கை வரை
14 கைகள்
15 கால்கள்

சித்த வைத்தியம் வர்மத்தை இவ்வாறு குறிப்பிடுகிறது:

வர்மங்கள் செயற்பாடுகள்
64 வாத வர்மம்
24 பித்த வர்மம்
6 கப வர்மம்
6 உள் வர்மம்
8 தட்டு வர்மம்

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்மம்&oldid=3403032" இலிருந்து மீள்விக்கப்பட்டது