வர்த்திகா நந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் வர்த்திகா நந்தா
பிறப்புபஞ்சாப்
தேசியம்இந்தியர்
பணிசிறை சீர்திருத்தவாதி, ஊடக கல்வியாளர் மற்றும் பயிற்சியாளர், ஆசிரியர்

வர்திகா நந்தா (Vartika Nanda) இந்தியாவைச் சேர்ந்த சிறை சீர்திருத்தவயும், ஊடகக் கல்வியாளரும் ஆவார். சிறை சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்ட " டிங்கா டிங்கா" என்ற இயக்கத்தின் நிறுவனரும் ஆவார். பெண்கள் அதிகாரம் குறித்து இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமான ஸ்த்ரீ சக்தி விருதினை (தற்போது நாரி சக்தி விருது என மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து பெற்றுள்ளார். ஊடகங்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் பெண்கள் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக குடியரசுத் தலைவர் இல்லத்தில் 2014 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவருக்கு வழங்கப்பட்டது. சிறை சீர்திருத்தத் துறையில் இவரது புதினப் பணிகள் இரண்டு முறை லிம்கா சாதனைகள் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. [1]

தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள லேடி சிறீராம் கல்லூரியில் பத்திரிகைத் துறைத் தலைவராக உள்ளார். முன்னதாக, மக்களவைத் தொலைக்காட்சியின் முதல் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார். ஜீ இந்தியாவில் ஒரு நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இவர் என்டிடிவியில் கிரைம் பீட் நிகழ்ச்சியின் தலைவரானார். இந்தியாவில் மின்னணு ஊடகங்களில் முதல் பெண் குற்றப் பின்னணி பற்றி எழுதும் நிருபர் என்ற பெருமையைப் பெற்றார்.

தொழில்சார் அனுபவம்[தொகு]

இந்திய அச்சு ஊடகங்களால் பாலியல் பலாத்கார வழக்குகள் தொடர்பான பிரச்சினைகள் என்றத் தலைப்பு குறித்து முனைவர் பட்டம் பெற்ற இவர், தற்போது தில்லி பல்கலைக்கழகத்தின் லேடி சிறீ ராம் கல்லூரியில் பத்திரிகைத் துறையின் தலைவராக உள்ளார். புது தில்லியின் இந்திய வெகுஜன தொடர்பு ஊடக தொழில்நுட்பக்கழகத்தில் தொலைக்காட்சி பத்திரிகையைப் பற்றி கடந்த மூன்று ஆண்டுகளாக இணை பேராசிரியராக கற்பித்தவர். [2] ஜீ நியூஸ், என்டிடிவி மற்றும் மக்களவைத் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு ஊடகங்களில் பல்வேறு பத்திரிகைப் பணிகளை இவர் வகித்துள்ளார். மக்களவை தொலைக்காட்சியின் முதல் நிர்வாக தயாரிப்பாளராக இருந்த வர்திகா, நிறுவனத்தில் கருத்தாக்கம், அமைத்தல் மற்றும் இயங்குவதில் ஒரு கருவியாகப் பங்கு வகித்தார்.

2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடிய்ரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி அவர்களால் ஸ்த்ரீ சக்தி விருது (இராணி காய்தின்லியு ஜெலியாங் விருது) வழங்கப்பட்டது. [3] ஊடகங்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் பெண்கள் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவர் செய்த பங்களிப்புக்கான அங்கீகாரமாக 2013 அனைத்துலக பெண்கள் நாள் அன்று இந்த விருது வழங்கப்பட்டது.

ஆராய்ச்சியாளராகவும் கல்வியாளராகவும் செய்த பணிகள்[தொகு]

சிறைச்சாலைகள், காவல்துறைக்கு இடையிலான உறவு, குற்றம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைத் துன்புறுத்துதல், பாலின அறிக்கை மற்றும் ஊடகங்களில் பெண்களின் சித்தரிப்பு ஆகியவை இவரது ஆராய்ச்சிப் பகுதிகளில் அடங்கும். நெருக்கடி தகவல்தொடர்பு குறித்த பயிற்சியையும் வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். 2017 ஆம் ஆண்டில் இராஜ்கமல் பிரகாசன் என்பவரால் வெளியிடப்பட்ட இவரது தொலைக்காட்சி & குற்ற அறிக்கையும் என்ற நூலுக்காக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் பார்தெண்டு ஹரிஷ் சந்திர விருது வழங்கப்பட்டது. [4]

வெளியீடு[தொகு]

"டிங்கா டிங்கா மத்தியப் பிரதேசம்" என்பது சிறைச்சாலைகளுக்குள் 12 ஆண் கைதிகள், 2 பெண் கைதிகள் மற்றும் சிறைகளில் வசிக்கும் 4 குழந்தைகள் மற்றும் ஒரு பிரஹாரி ஆகியோரின் சிறை வாழ்க்கையை குறிக்த்து இவர் எழுதிய ஒரு புத்தகமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tihar jail inmates' song Tinka Tinka Tihar makes it to Limca Book of Records". www.hindustantimes.com. 5 April 2017.
  2. "CWT - Vartika Nanda - HJ, Delhi - 1993-94 Batch #CampusWaleTeachers". linkedin.com. 6 February 2017. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
  3. "Press Information Bureau Photo Gallery". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
  4. "Television Aur Crime Reporting - टेलीविज़न मीडिया - Television Media - संचार मीडिया - Communication and Media Studies - All Publications". rajkamalprakashan.com. Archived from the original on 2018-12-19. பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
  • Vartika Nanda in Limca Book of Records: Hindustan Times

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்த்திகா_நந்தா&oldid=3815772" இலிருந்து மீள்விக்கப்பட்டது