வர்த்தக நிறுவனம்
வர்த்தக நிறுவனம் என்று அறியப்படும் நிறுவனம் பல்வேறு வகையான பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நிறுவனமாகும். இத்தகைய நிறுவனங்கள் பிற நிறுவனங்களுக்காகவோ அரசாங்கம் தொடர்பான காரியங்களுக்காகவோ பொருட்களைக் கொண்டு சேர்க்கின்றன. சில சமயங்களில், பல்விதமான பொருட்களையோ பங்குகளையோ பிற நிறுவனங்களிடம் இருந்து வாங்கி வருவாய்மிக விற்பனை செய்யும் பணிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் ஈடுபடுவதுண்டு.[1]
விவரங்கள்
[தொகு]இறக்குமதி செய்யப்பட்டப் பொருட்களையும் மொத்த விலை விற்பனையாளர்களின் பொருட்களையும் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் தேவை வரும்போது வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இத்தகைய நிறுவனங்கள் பெருவாரியான இடங்களில் கிளைகள் வைத்திருப்பது எனவே அவசியம் ஆகிறது. மேலும், பல்வேறு நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி சட்டங்கள் அறிந்து அதற்கேற்ப செயல்படுவது முக்கியம். விரைவான விநியோகம், தெளிவான கணக்கு வழக்குகள் மற்றும் நவீன சந்தைப்படுத்துதல் உக்திகள் ஆகியவை இத்தகைய நிறுவனங்களின் வணிகமாதிரிகளாக உள்ளன.