உள்ளடக்கத்துக்குச் செல்

வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை
குறிக்கோளுரைமனிதகுல சேவையில்
வகைசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு
உருவாக்கம்நவம்பர் 2001, 2001; 24 ஆண்டுகள் முன்னர் (2001-11-2001)
சார்புதேசிய மருத்துவ ஆணையம்
நிதிநிலை₹2,179.58 கோடி (ஐஅ$250 மில்லியன்) (2025–26)
முதல்வர்மருத்துவர் கீதிகா கன்னா
பணிப்பாளர்மருத்துவர் கவிதா ராணி சர்மா
கல்வி பணியாளர்
295+
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்320 (எம்.டி, எம்.எஸ்,டி.எம், MCh, DNB உட்பட)
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்vmmc-sjh.nic.in

வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி (Vardhman Mahavir Medical College) என்பது புது தில்லியில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியாகும். இது மருத்துவப் பயிற்சிக்காகப் புகழ்பெற்ற சப்தர்ஜங் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இக்கல்லூரி குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது.

வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி 2001 நவம்பர் மாதத்தில் சப்தர்ஜங் மருத்துவமனையில் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான சப்தர்ஜங் மருத்துவமனை இரண்டாம் உலகப்போரின்போது தொடங்கப்பட்டது.[2]

வரலாறு

[தொகு]

இக்கல்லூரி 17 திசம்பர் 2001 அன்று அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் லால் கிருஷ்ண அத்வானி , சி. பி, தாக்கூர் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்), நிறுவனர் முதல்வர் டாக்டர் ஜகதீசு பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் பேராசிரியர் ஜெயஸ்ரீ பட்டாச்சார்யா, பேராசிரியர் என். என். மாத்தூர் ஆகியோர் கல்லூரியின் முதல்வர்களாகப் பணியாற்றினர். முதல் மருத்துவ மாணவர் குழு 2002 பிப்ரவரி மாதத்தில் சேர்ந்தது. அதன் பின்னர் பல மாணவர் குழுக்கள் இக்கல்லூரியில் சேர்ந்துள்ளன.

இக்கல்லூரி தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் பெற்றுள்ளது.[3] மேலும் உலக மருத்துவப் பள்ளிகளின் அடைவிலும் அவிசென்னா மருத்துவ அடைவிலும் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு

[தொகு]

இக்கல்லூரி தில்லியில் உள்ள குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.

2008 ஆம் ஆண்டு முதல், முன்பு தில்லி பல்கலைக்கழகம் உடன் இணைக்கப்பட்டிருந்த முதுநிலைப் படிப்புகள் குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.[4]

தரவரிசைகள்

[தொகு]

கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி தரவரிசையில் இக்கல்லூரி 17வது இடத்தில் உள்ளது.[5]

மேலும், இந்தியா டுடே இதழின் 2024 மருத்துவக் கல்லூரி தரவரிசையில் இந்தியாவில் 7வது இடம் பெற்றுள்ளது.[6]

28°34′08″N 77°12′11″E / 28.568974°N 77.203071°E / 28.568974; 77.203071

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "About Medical College & Safdarjung Hospital". Archived from the original on 25 March 2008. Retrieved 2 July 2008.
  2. ↑ "Vardhman Mahavir Medical College & Safdarjung Hospital Best Medicine Colleges 2012 India Today Survey". intoday.in. IndiaToday. Archived from the original on 14 July 2014. Retrieved 6 July 2014.
  3. ↑ "About VMMC | VMMC". vmmc-sjh.nic.in. Archived from the original on 3 February 2020. Retrieved 2020-01-20.
  4. ↑ "Affiliated colleges GGS Indraprastha University". ipu.ac.in. Retrieved 6 July 2014.
  5. ↑ "NIRF Ranking 2024" (PDF).
  6. ↑ "India Today".