வர்ண ராமேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வர்ண இராமேசுவரன்
Varna Rameswaran.jpg
பிறப்புஅளவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புசெப்டம்பர் 25, 2021(2021-09-25)
தொராண்டோ, கனடா
தேசியம்இலங்கைத் தமிழர், கனடியர்
கல்வியாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி
பணிபாடகர்
அறியப்படுவதுகருநாடக இசைப் பாடகர், இசைக்கலைஞர்
பெற்றோர்முருகேசு வர்ணகுலசிங்கம்

வர்ண இராமேஸ்வரன் (இறப்பு: 25 செப்டம்பர் 2021) ஈழத்துக் கருநாடக இசைப் பாடகரும் மிருதங்கக் கலைஞரும் ஆவார். ஈழத்து எழுச்சிப்பாடல்கள் பலவற்றைப் பாடியவர். மாவீரர் நாள் பாடலைப் பாடியவர். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இராமேஸ்வரன். தந்தையார் கலாபூசணம், சங்கீதரத்தினம் முருகேசு வர்ணகுலசிங்கம் ஒரு சிறந்த இசைப் பாரம்பரியத்திலே தோன்றியவர். இவரது தந்தை வழிப்பேரனார், தாய் வழிப்பேரனாரும் இசை நாடகக் கலைஞர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார்.[1] இராமேசுவரன் பண்ணிசை மூலமும், பின்னர் மிருதங்கம் வாசிப்பது மற்றும் ஆர்மோனியம் வாசிப்பதன் மூலமும் தந்தையின் பயிற்சியில் கருநாடக இசையைக் கற்றார்.[1] வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட வாய்ப்பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றுக்கான சோதனைகளில் ஆசிரியர் தரம் வரை தேறி, மிருதங்கக் கலாவித்தகர் என்ற பட்டம் பெற்றார்.[2] பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பிரிவில் மாணவனாக இணைந்து கொண்டார். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலாமணி என்னும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று, அங்கேயே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[2] சென்னைப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை மேற்கொண்டு டி. எம். தியாகராஜன், டி. வி. கோபாலகிருட்டிணன் போன்றோரிடம் இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேறினார்.[2]

இலங்கை வானொலி, தொலைக்காட்சி சேவைகளில் பல நிகழ்ச்சிகளை இசையமைத்து நடத்தியுள்ளார். தமிழ்த் தேசியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பல தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடி இறுவட்டுகளாகவும், ஒலிநாடாக்களாகவும் வெளியிட்டுள்ளார்.[2]

கனடாவிற்குப் புலம் பெயர்ந்த இவர் தொராண்டோவில் 'வர்ணம் இசைக் கல்லூரி' என்ற பெயரில் இசைப் பாடசாலை அமைத்து இசை வகுப்புகளை நடத்தி வந்தார்.[2]

2016-ஆம் ஆண்டில் கனடாவின் தமிழர் தகவல் மையத்தினர் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் தங்கப் பதக்கமும் அளித்து சிறப்புச் செய்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 “ஈழமண் தந்த குயில்” வர்ணராமேஸ்வரன், நேர்காணல்
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 சங்கீத, மிருதங்க கலாவித்தகர் வர்ண ராமேஸ்வரன், தமிழர் தகவல் பெப்ரவரி 2016 (25ஆவது ஆண்டு மலர்), தொராண்டோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ண_ராமேஸ்வரன்&oldid=3287782" இருந்து மீள்விக்கப்பட்டது