வரோதய சிங்கையாரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். புத்திக் கூர்மை உடையவனாயிருந்த இவன் கி.பி 1302 ஆம் ஆண்டுக்கும் 1325 ஆம் ஆண்டுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தை ஆண்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகின்றது. இவன் விக்கிரம சிங்கையாரியனின் மகனாவான். தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனக் கலவரங்களுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் நாட்டில் அமைதியை இவன் நிலை நிறுத்தியதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.

இவனைத் தொடர்ந்து இவனது மகன் மார்த்தாண்ட சிங்கையாரியன் அரசனானான்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரோதய_சிங்கையாரியன்&oldid=3228017" இருந்து மீள்விக்கப்பட்டது