உள்ளடக்கத்துக்குச் செல்

வரே மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரே மக்கள் (Waray people) சமர், பிலிரன், லெய்டே (கிழக்கு விசயாசு) போன்ற தீவுகளைச் சேர்ந்த பிலிப்பைன்சு நாட்டு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் இவர்களுக்கே உரித்தான வரே-வரே மொழியினைப் பேசுகின்றனர். வரேமக்களின் மக்கள் தொகை 3.2 மில்லியன் ஆகும். இவ்வின மக்கள் உரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வின மகளால் பயிரிடப்படும் பிரதான பயிர் தென்னை ஆகும். இவ்வினமக்களின் வாழ்க்கைத் தொழில்களாக விவசாயமும் மீன்பிடியும் திகழ்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரே_மக்கள்&oldid=1813150" இலிருந்து மீள்விக்கப்பட்டது