வருண் சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருண் சோப்ரா (ஆங்கிலம்: Varun Chopra) 1987 ஜீன் 27 அன்று பிறந்த ஒரு ஆங்கில முதல் தர துடுப்பாட்ட வீரர் ஆவார், மேலும் 2005 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராகவும், 2006 ல் இந்தியாவுக்கும் எதிரான தொடரில் ஆங்கில 19 வயதிர்குட்படோருக்கான துடுப்பாட்ட அணியின் தலைவராக உள்ளார்.

சோப்ரா இல்ஃபோர்ட் கவுண்டி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் மற்றும் இல்ஃபோர்ட் துடுப்பாட்ட கிளப்பில் விளையாடினார்.[1]

அவர் எசெக்சு அணிக்காக விளையாடினார், மேலும் 2006 ஆம் ஆண்டில் மூத்தோர் தரப்பில் அறிமுகமானார், க்ளூசெஸ்டர்ஷையருக்கு எதிரான வெற்றி தோவியற்ற ஒரு ஆட்டத்தில் 106 ஓட்டங்கள் எடுத்தார், கவுண்டி துடுப்பாட்டத்தில் எசெக்சுக்காக ஒரு சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

எசெக்சில் இளம் துடுப்பாட்ட வீரர்கள் அதிக வீரர்கள் வெளிவருவது சமீபத்தில் இயல்ப்பானது. இதில் முன்னாள் இங்கிலாந்து தொடர் போட்டி மற்றும் ஒருநாள் போடியின் தலைவர் அலெஸ்டர் குக் ஆகியோர் அடங்குவர். வருண் சோப்ரா கணிசமான திறமை கொண்ட தொடக்க துடுப்பாட்ட வீரராவார். அவர் ஏற்கனவே 19 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணியின் தலைவராக ஈர்க்கப்பட்டார், அவரை 2005 ஆம் ஆண்டில் இலங்கை பயணத்தின் போது விரிவான தொடர் போட்டியிலும் வெற்றிக்கு இட்டுச் சென்றார். அவர் தன்னைத்தானே உத்வேகப் படுத்திக் கொண்டார். தொடர்ட் போட்டிகளில் சராசரியாக 48 மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் அரைசதம் அடித்தார். ஆனால் வாழ்க்கை அவருக்கும் அவரது தரப்பினருக்கும் உடனடியாக கடினமாகிவிட்டது - வங்காள தேசத் குளிர்கால சுற்றுப்பயணத் தொடரில் 11-0 என ஆனது..

மேற்கு ஆஸ்திரேலியாவில் முதல் தர விளியாட்டில் விளையாடுவதற்காக வருண் சோப்ரா 2006 மற்றும் 2007 பருவத்தில் வில்லெட்டன் டிராகன்ஸ் மட்டைப் பந்து அணியில் சேர்ந்தார்.

கிரகாம் கூச் ஒரு நல்ல ரசிகர். அவரை "தனது விளையாட்டில் கடினமாக உழைத்து ஒரு பந்தின் மீது இயற்கையான கண் வைத்திருக்கும் ஒரு புத்திசாலி பையன்" என்று அழைக்கிறார். கூச் ஒரு இந்திய பயிற்சி முகாமில் அவரை முதலில் சந்தித்தார். "அவர் ஒரு நல்ல வீரராகப் பார்த்தார் - நிமிர்ந்து, முன் மற்றும் பின் கால்களை நேராக கவர் திசை வழியாக விளையாட விரும்புகிறார். என்று கூறுனார்.

சோப்ராவின் உள்நாட்டு விளையாட்டு 2006 இல் நன்றாகத் தொடங்கியது - அவர் சாம்பியன்ஷிப் கோப்பையில் அறிமுக வீரரான இவர் ஒரு நூற்றி ஐம்பது ஓட்டங்கள் அடித்தார். மேலும் முதல் அணியில் மெதுவாக தனது அடையாளத்தை உருவாக்கி வருகிறார். கிராண்ட் ப்ளவரை வெளியேற்றினார்.

சோப்ரா 2010 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வார்விக்சயர் அணியில் சேர்ந்தார்.[2] 2011 ஆம் ஆண்டில், கவுண்டி போட்டிகளில் அடுத்தடுத போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வார்விக்ஷயர் மட்டையாட்ட வீரர் ஆனார்.[3] வார்விக்ஷயரில் ஏழு, தொடர் வெற்றிகரமான பருவங்களுக்குப் பிறகு, அவர் 2016 ஆண்டில் எசெக்சு அணிக்கு.[4] 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அலஸ்டைர் குக் விளியாடத போதுதான் அவர் சாம்பியன்ஷிப்பில் விளையாடினார். ஏனெனில் நிக் பிரவுன் மற்றொரு தொடக்க வீரர் நிலையை எடுத்தார். ஆனால் வரையறுக்கப்பட்ட பந்து வீச்சு ஆட்டங்களில் அவர் முதல் தேர்வாக இருந்தார். 2019 ஆம் ஆண்டில் அவர் லண்டன் ஒருநாள் கோப்பையில் 3 சதங்கள் அடித்தார் மற்றும் சராசரியாக 84 [5] ஓட்டங்களைப் பெற்றார், ஆனால் எசெக்சு தகுதி பெறவில்லை.

சோப்ரா 2013 இல் இங்கிலாந்து லயன்ஸ் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்தார்.

ஜூலை 2019 இல், யூரோ இருபது- 20 ஸ்லாம் துடுப்பாட்ட போட்டியின் தொடக்க பதிப்பில் ஆம்ஸ்டர்டாம் நைட்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[6][7] இருப்பினும், அடுத்த மாதம் போட்டி ரத்து செய்யப்பட்டது.[8]

குறிப்புகள்[தொகு]

  1. "Derbyshire 312 Essex 271–4: Flower proves hot in chiller". The Independent On Sunday. 22 June 2006 இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121111062201/http://www.independent.co.uk/sport/cricket/derbyshire-312-essex-2714-flower-proves-hot-in-chiller-404924.html. பார்த்த நாள்: 24 April 2011. 
  2. "Chopra ready to make a step up with Warwickshire". Coventry Telegraph. 31 May 2010 இம் மூலத்தில் இருந்து 25 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120925085851/http://www.coventrytelegraph.net/coventry-warwickshire-sport/coventry-warwickshire-cricket/warwickshire-ccc/2010/03/31/chopra-ready-to-make-a-step-up-with-warwickshire-92746-26143671/. பார்த்த நாள்: 24 April 2011. 
  3. "Varun Chopra scores second successive double century to put Warwickshire in control against Worcestershire". The Telegraph. 24 April 2011. https://www.telegraph.co.uk/sport/cricket/counties/8469033/Varun-Chopra-scores-second-successive-double-century-to-put-Warwickshire-in-control-against-Worcestershire.html. பார்த்த நாள்: 24 April 2011. 
  4. "Varun Chopra". The Fortress. https://www.essexcricket.org.uk/teams/first-xi/player-profiles/varun-chopra/. பார்த்த நாள்: 13 April 2019. 
  5. "Essex Batting Averages". cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/averages/batting_bowling_by_team.html?id=12760;team=1035;type=tournament. பார்த்த நாள்: 13 April 2019. 
  6. "Eoin Morgan to represent Dublin franchise in inaugural Euro T20 Slam". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
  7. "Euro T20 Slam Player Draft completed". Cricket Europe. Archived from the original on 19 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Inaugural Euro T20 Slam cancelled at two weeks' notice". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.

வெளி இணைப்பு[தொகு]

வருண் சோப்ரா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 24 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண்_சோப்ரா&oldid=3670383" இலிருந்து மீள்விக்கப்பட்டது