வருணா நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வருணா நதி (Varuna River) இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியின் சிறிய துணை நதியாகும். இது பிரயாகராஜ் மாவட்டத்தில் புல்புரில் உருவாகி வாரணாசி மாவட்டத்தில் உள்ள சாரை மோகனாவில் கங்கையுடன் கலக்கிறது.[1] பிரத்தாப்புகர் மாவட்டத்தின் சாரை மோகனாவிலிருந்து சடார் வரையுள்ள 6 கிலோ மீட்டர்ப் பகுதியானது வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படுகிறது.[2] 'வாரணாசி' என்ற பெயர் வருணா மற்றும் அசி என்ற இரண்டு நதிகளின் பெயரிலிருந்து உருவானது.

வாமன புராணத்தின்படி, ஆசி ஆற்றின் அருகே தெய்வங்களால் இந்த வருணா நதி உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இந்தத் தகவலானது மகாபாரதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருணா_நதி&oldid=3322596" இருந்து மீள்விக்கப்பட்டது