வருடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருடைமான், வரைவு-ஓவியம்
வருடைமான்

வருடை, வருடைமான், என வழங்கப்பட்ட விலங்கினம் காடுகளில் தானே மேயும் மானினம் அல்லது ஆட்டினம்.

வருடைமான் பற்றிய சங்கநூல் குறிப்புகள்[தொகு]
வருடையின் கால் நகங்கள் நாயின் நகங்கள் போல இருக்கும். [1]
வருடைக் குட்டி மலைப்பாறைகளின் மேல் ஏறி இறங்கி விளையாடும். [2]
வருடை குத்துநிலைப் பாறைகளிலும் ஏறும் \செவ்வரைச் சேக்கை வருடைமான் மறி [3]
வருடை அச்சம் தரும் பாறை அடுக்கங்களில் பாய்ந்து சண்டையிட்டுக்கொண்டு விளையாடும். தலைவன் தந்த ஆடை அந்த அடுக்கங்களில் பறித்துவந்து தைக்கப்பட்டது.[4]
வருடை தன் குடும்ப இனத்தை ஆட்டிவைக்கத் துள்ளி விளையாடும்போது பெரிய கலைமான்களும் சேர்ந்து விளையாடும் [5]
வருடையை அதன் குழவிப் பருவத்திலேயே பிடித்துவந்து மக்கள் வளர்ப்பது உண்டு. [6]
வருடை கிளிகளை வெறுக்கும் [7]
வருடைக்குட்டியானது படுத்துறங்கும் பெண்யானை மேல் ஏறி விளையாடும் [8]
வருடை தண்டாரணிய நிலப்பகுதியிலும், நன்னன் நாட்டு மலைப்பகுதிகளிலும் மிகுதியாக வாழ்ந்தன. [9]
வரைவாழ் வருடை, நன்னன் மலையில் காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 12 விலங்கினத்தில் ஒன்று,[10]
மலைபடுகடாம் நன்னன் மலைநாட்டில் வாழ்ந்த 12 விலங்கினம்[தொகு]
  1. ஆமான் – மடநடை போடும்
  2. உடும்பு – அரக்கு போல் பிடி விடாத்து
  3. உழுவை – அளைக்குகைகளில் வாழ்வது
  4. கரடிக்குட்டி, எண்குக் குருளை – குடா அடி கொண்டது, ஊமை
  5. கழுகு – பாம்பைக் கொன்று உண்ணும் தீர்வை
  6. கானக்கோழி – (விட்டிசை போல்) கவர்குரல் எழுப்பும்
  7. தகர் – வலிமையான தலை கொண்ட ஆடு
  8. புலி, - கவர்பரிக் கொடுந்தாள்
  9. மஞ்ஞை – மலைக்கு அழகு தரும் மயில்
  10. மரையான் குழவி – பெரிய காதுகளைக் கொண்டது
  11. யானக்குட்டி - கயமுனிக் குழவி
  12. வருடை, - வரையில் வாழ்வன

வருடையை ஒப்புமையால் மேழ-ஓரை (மேஷ ராசி) என்று கூறி நாள் குறிக்கின்றனர். [11]
வருடையைச் சரபம் என்னும் எட்டுக்கால் விலங்கு என்பது புராணச் செய்தி.

அடிக்குறிப்பு[தொகு]

  1. வரையாடு வருடைத் தோற்றம் போலக் கூர்உகிர் ஞமலி – பட்டினப்பாலை 139
  2. இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் வருடைமான் குழவி – கலித்தொகை 43-14
  3. குறுந்தொகை 187
  4. அவன்தலைப் போருடை வருடையும் பாயாச் சூருடை அடுக்கத்த கொயற்கு அருந்தழையே - நற்றிணை 359
  5. கருங்கலை கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும் - நற்றிணை 119
  6. வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போல, தலைவியைப் பாராட்டி வளர்க்க வேண்டும் – கலித்தொகை 50-21
  7. நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வெறூஉம் - ஐங்குறுநூறு 287
  8. இரும்பிடி … வருடை மடமறி ஊர்விடைத் துஞ்சும் – கலித்தொகை 50-4
  9. தண்டாரணியத்துப் பற்றுக்கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்து - பதிற்றுப்பத்து பதிகம் 6
  10. மலைபடுகடாம் 503
  11. வருடையைப் படிமகன் வாய்ப்பு - பரிபாடல் 11-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருடை&oldid=1546948" இலிருந்து மீள்விக்கப்பட்டது