வருங்கால வைப்பு நிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருங்கால வைப்பு நிதி என்பது பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம். அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இதுவே வருங்கால வைப்பு நிதி. இதில் 8.33 சதவீதம் பென்சன் திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும்.

சம்பளத்தில் 12 சதவீதம் வைப்பு நிதி என்றாலும் , எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் குறைந்தது நிறுவனம் 1800 ருபாய் செலுத்தவேண்டும் என்ற விதி இருப்பதால் இதையே நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. நிறந்த வைப்பு நிதி எண் UAN Universal Account Number கையாளப் படுகிறது.பி எஃப் இணையதளத்தில் நமது தொகையை அறியமுடியும். பணியில் சேர்ந்து 5 ஆண்டுக்குள் பி எஃப் தொகையை எடுக்கவேண்டும் என்றால் 10 % தொகை பிடித்தம் செய்யப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் என்றால் பிடித்தம் கிடையாது. இரண்டு மாதத்துக்கு மேல் வேலை இல்லை என்றால் பி எஃப் தொகை எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு.குழந்தைகள் படிப்பு , திருமணம், மருத்துவம், வீடுகட்டுதல் போன்றவற்றிர்க்கு முன் பணம் எடுத்துக்கொள்ளலாம். வரும் 2015 மார்ச்சு மாதம் முதல் பி எஃப் தொகையை ஆன்லைன் மூலம் 3 மணி நேர பரிசீலனையில் பி எஃப் வங்கிக்கணக்கில் பெறும் திட்டம் வர உள்ளது. தற்போது ஆதார் எண் உள்ளவர்கள் 3 நாட்களில் பெறமுடியும். தற்போது பி எஃப் ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இவை அரசாங்க பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2015 - 2016 நிதி ஆண்டில் 5000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முத்லீடு செய்யப் போவதாக ஆணையம் அறிவித்து உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பி எஃப் தொகைக்கு 8.7 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாதம் 12 சதவீதத்திற்கும் மேல் பிடித்தம் செய்ய வசதி உண்டு.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருங்கால_வைப்பு_நிதி&oldid=2511809" இலிருந்து மீள்விக்கப்பட்டது