வரி விகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிநபருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் வரி விதிக்கப்படும் விகிதம் வரி விகிதம் (tax rate) எனப்படும்.

சட்ட வரி விகிதம்[தொகு]

சட்ட வரி விகிதம் (Statutory tax rate) என்பது ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் சட்டப்படி விதிக்கப்படும் வரி விகிதம். வருமான வரிக்கான சட்ட வரிவிகிதம் வெவ்வேறு வருமான வரம்புகளுக்கு ஏற்ப மாறும். விற்பனை வரிக்கான சட்ட வரி விகிதம் விகிதமுறைப்படி சீராக இருக்கும்.

சராசரி வரி விகிதம்[தொகு]

வரிவிதிக்கக்கூடிய மொத்த வருமானம் அல்லது செலவீனத்தில் எத்தனை வீதம் வரியாக செலுத்தப்படுகிறதோ அது சராசரி வரி விகிதம் (Average tax rate) எனப்படும். இதுவும் விழுக்காட்டினை அலகாகக் கொண்டது.[1]

இறுதிநிலை வரி விகிதம்[தொகு]

ஒரு நபரோ அமைப்போ தான் ஈட்டும் ஒவ்வொரு ரூபாய்/டாலர் கூடுதல் வருமானத்திற்காகக் கட்ட வேண்டிய வரிவிகிதம் இறுதிநிலை வரிவிகிதம் (Marginal tax rate) எனப்படுகிறது. இறுதியாக ஈட்டிய வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரிவிகிதமே இறுதிநிலை வரிவிகிதமாகும்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "What is the difference between statutory, average, marginal, and effective tax rates?" (PDF). Americans For Fair Taxation. Archived from the original (PDF) on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2007-04-23.
  2. Piper, Mike (Sep 12, 2014). Taxes Made Simple: Income Taxes Explained in 100 Pages or Less. Simple Subjects, LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0981454214.
  3. "Marginal Tax Rates". Concise Encyclopedia of Economics (2nd). (2008). Ed. David R. Henderson (ed.). Indianapolis: Library of Economics and Liberty. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0865976658. இணையக் கணினி நூலக மையம் 237794267. 
  4. William Perez. "Federal Income Tax Rates for the Year 2013". about.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரி_விகிதம்&oldid=3894018" இலிருந்து மீள்விக்கப்பட்டது