வரிக்கடவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சின் பாரிசில் உள்ள ஒரு வரிக்கடவை.
சிங்கப்பூரில் உள்ள ஒரு உயர்த்திய வரிக்கடவை.

வரிக்கடவை (Zebra crossing) என்பது நடந்து செல்வோர் சாலைகளைக் கடப்பதற்காக அமைக்கப்படும் ஒரு வழி ஆகும். இது உலகின் பல நாடுகளிலும் காணப்படுகின்றது. இதில் பெரும்பாலும் கறுப்பு வெள்ளை நிறங்களிலான பட்டைகள் அடுத்தடுத்துக் காணப்படும். இது வரிக்குதிரையின் வரிகளை ஒத்திருப்பதால் ஆங்கிலத்தில் இதை வரிக்குதிரைக் கடவை எனப் பெருள்படும் "சீப்ரா குரொசிங்" (Zebra crossing) என அழைப்பர்.

வடிவமப்பு[தொகு]

வரிகள் சாலையில் போக்குவரத்தின் திசைக்கு இணையாகவும் நடக்கும் திசைக்குக் குறுக்காகவும் அமைந்திருக்கும். வரிகள் கடும் நிறத்திலும் இளம் நிறத்திலும் மாறிமாறி இருக்கும். இளம் நிறம் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பது உண்டு. சாலை கறுப்பு அல்லது அதற்கு அணித்தான கடும் நிறத்தில் அமைவதால் வெள்ளை நிற வரிகளை மட்டும் இடைவெளி விட்டுப் பூசுவதன் மூலம் வரிக்கடவை உருவாக்கப்படுகிறது. வரிகள் ஒவ்வொன்றும் 40 - 60 சதமமீட்டர் அளவுடன் ஒரே அகலம் கொண்டவையாக இருப்பது வழக்கம்.

போக்குவரத்துக் குறைவாக இருக்கும் சாலைகளில் பொதுவாக நடப்பவர்களுக்கே வழியுரிமை இருக்கும். சாலையைக் கடப்பதற்கு ஆட்கள் நிற்கும்போது வண்டிகளை நிறுத்தி வழி விடவேண்டும். போக்குவரத்துக் கூடுதலாக இருக்கும் சாலைகளில், கடப்பதை ஒழுங்கு படுத்துவதற்காக நிறச் சைகை விளக்குகள் அமைப்பது உண்டு. வேகமான போக்குவரத்துக் கொண்ட நெடுஞ்சாலைகளில் பொதுவாகச் சாலைகளைக் கடப்பதற்கு வரிக்கடவைகள் பயன்படுவதில்லை.

வரலாறு[தொகு]

1940களிலும் 1950களின் தொடக்கத்திலும் உருவான அதிகரித்த சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாக இங்கிலாந்தில் முதன் முதலாக வரிக்கடவைகள் அறிமுகமாயின. 1951 அக்டோபர் 31 ஆம் தேதி முதல் வரிக்கடவை பேர்க்சயரில் உள்ள சிலோவில் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.[1]

குறிப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிக்கடவை&oldid=1732966" இலிருந்து மீள்விக்கப்பட்டது