வரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரிகள் ஒரு அரசாங்கத்தின் நிர்வாகத்தின் நிதி ஆதாரத்திற்கான முக்கியமான அங்கமாகும். வரிவிதிப்பு என்பது நவீன பொது நிதியின் மத்திய பகுதியாகும். அதன் முக்கியத்துவம், அனைத்து வருவாய்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், இந்த வரிவிதிப்பினால் ஏற்படும் சிக்கல்கள்களிலும் சுமைகளிலும் கூட தெரியவரும் [1]. வரிவிதிப்பின் முக்கிய நோக்கம் நிதி ஆதாரத்தை உயர்த்துவதாகும். மாநிலத்தில் மக்களின் நலனை காக்கவும் அதன் கடமைகளை நிறைவேற்றவும் வரி விதிப்பில் உயரிய குறிக்கோள் அவசியம். சில சமூக குறிக்கோள்களை அடைவதற்கு ஒரு கருவியாக வரிவிதிப்பு பயன்படுத்தப்படுகிறது, அதாவது செல்வத்தை மறுவிநியோகம் செய்வதன் வழியாகவும், அதன் மூலம் சமத்துவமின்மையை குறைக்கவும் பயன்படுகிறது. நவீன அரசாங்கத்தில் வரிவிதிப்பு என்பது நிர்வாகம் மற்றும் சமூக சேவைகளின் மீதான அதிகரித்துவரும் செலவினங்களை சந்திக்க வேண்டிய வருவாயை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், வருமானம் மற்றும் செல்வ வளத்தின் சமத்துவமின்மையை குறைப்பதற்கும் தேவையானதாகும். நுகர்வோர் நுகர்வு மற்றும் பணவீக்கத்தை உயர்த்துவதற்கு பணம் செலுத்துவதற்கு வரி விதிக்கப்பட வேண்டும்.[2]. வரி என்பது நிதி சார்ந்த கட்டணம் அல்லது மற்ற வகையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், சட்டரீதியான நிறுவனங்களிடமிருந்து அரசால் அல்லது அரசுக்கு சமமானவர்களால் வசூலிக்கப்படுவதாகும். வரிகளை மாநில அரசாலும் அல்லது ஒரு துணை நிறுவனத்தாலும் சுமத்த முடியும். வரிகளில் நேரடி வரி அல்லது மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளது, வரி என்பது தனிநபர் அல்லது சொத்து மீது விதிக்கப்படும். அரசை ஆதரிக்க நிதி சுமை சட்டரீதியான அமைப்புகளால் வசூலிக்கப்படுவதாகும் [3]. வரி என்பது கட்டாயமாக செலுத்தும் கட்டணமோ அல்லது நன்கொடையோ அல்ல, ஆனால் அது ஒரு சட்டரீதியான பங்களிப்பிற்கு உட்பட்டது, மேலும் இது சட்டரீதியான அமைப்புகளால் வசூலிக்கப்படும் (அரசால் விதிக்கப்பட்டவைகள்) பங்களிப்புகள் ஆகும்[4].

வரிகளின் வகைகள்:[தொகு]

வரிகளில் பல்வேறு வகையான வரிகள் உள்ளன, அவை பரவலாக இரு தலைகளாக பிரிக்கப்படுகின்றன - நேரடி வரிகள் (இது விகிதாசாரமானது) மற்றும் மறைமுக வரிகள் (இயல்பில் வேறுபாடு):

 • முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு வசூலிக்கப்படும் வரி.
 • கலால் வரி (விற்பனைக்குரிய உற்பத்திப் பொருட்கள் அல்லது விற்பனைக்குரிய சில பொருட்களின் மீது வசூலிக்கப்படும் வரி).
 • விற்பனை வரி (வியாபார பரிவர்த்தனைகளின் மீதான வரி, குறிப்பாக விற்பனை மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் வரி).
 • மதிப்புக்கூட்டுவரி (விற்பனை வரியின் ஒரு வகையை சார்ந்தது)
 • குறிப்பிட்ட சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவை வரி.
 • சாலை வரி; வாகன கட்டணம், பதிவு கட்டணம் (அமெரிக்கா), ரெக்கோ (ஆஸ்திரேலியா), வாகன அனுமதிப்பத்திர கட்டணம் (பிரேசில்) போன்றவை..
 • பரிசுப்பொருட்கள் மீதான வரி.
 • கடமைகள் (இறக்குமதி மீதான வரிகள், சுங்க வரி விதிப்பு)
 • பெருநிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி (ஒருங்கிணைந்த நிறுவனங்கள்).
 • சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி
 • தனி நபர் வருமான வரி (தனிநபர்கள், இந்தியாவில் இந்து கூட்டு குடும்பம் போன்ற குடும்பங்கள், இணைக்கப்படாத சங்கங்கள், போன்றவை மீது விதிக்கப்படும் வரி).

மேற்கோள்கள்[தொகு]

 1. C. E. Bohanon, J. B. Horowitz and J. E. McClure (September 2014). "Saying Too Little, Too Late: Public Finance Textbooks and the Excess Burdens of Taxation". Econ Journal Watch 11 (3): 277–296. http://econjwatch.org/issues/volume-11-issue-3-september-2014. பார்த்த நாள்: November 2014. 
 2. http://budget.ap.gov.in/es2k_pf.htm
 3. Black's Law Dictionary, p. 1307 (5th ed. 1979).
 4. Id.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிகள்&oldid=2369432" இருந்து மீள்விக்கப்பட்டது