வரதட்சணை சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961லிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. வரதட்சணை தடைச்சட்டத்தின்படி ஒரு குற்றமாகும். வரதட்சணை தடைச்சட்டம் (1961) இதைத்தொடர்ந்து இச்சட்டம் மணப்பெண்கள் எளிதில் மாமனார் வீட்டில் குறைகளை களைய பெண்களூக்கு சாதகமாக மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆண் உரிமைக்கழகம் பெண்கள் இதைத் தவறுதலாக பயன்படுதுவதாக எதிர்ப்புகள் கிளம்பின.[1]

சாவுகள்[தொகு]

சட்டங்கள் இருந்த போதிலும் வரதட்சணை சாவுகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. 2010ம் வருடத்தில் மட்டும், இந்தியாவில் 8,391 வரதட்சணை சாவுகள் (கொலை, தற்கொலை) காணப்பட்டன[2].

ஆகையால், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திருத்தங்கள் ஆண்களைப் பாதுகாக்கும் விதத்திலும் இச்சட்டத்தை பெண்கள் தவறாக உபயோகிக்காமலும் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பட்டியல்[தொகு]

இதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பாத்திர பண்டங்கள் போன்ற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட் வேண்டும். மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும்.

தண்டனை[தொகு]

அதே நேரத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத் தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பட்டிருக்கிறது.வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும், வழிவகை செய்யப்படும்.

புகார் செய்தல்[தொகு]

குற்றம் நடந்த இடம் மட்டுமல்லாது, வேறு இடத்தில் இருந்தும் புகார் செய்யலாம்.[3] பாதிக்கப்பட்ட பெண், தன் சொந்த அல்லது தற்காலிக வீட்டில் இருந்து, புகார் செய்ய அனுமதிக்கப்படும் போது, அப்பெண், தன் பெற்றோரின் வீட்டில் இருந்து கொண்டும், சுதந்திரமாக புகார் செய்யலாம். அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, பாதிக்கப்பட்ட நபர்கள் ஆவார்கள் .

இந்திய தண்டனைச் சட்டம்[தொகு]

2003 ல் அமைக்கப்பட்ட மலிமாத் கமிட்டி இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவை மாற்ற எண்ணியது. இதனை மளிர்மன்றங்கள் எதிர்த்தன[4]. சமுதாய ஆராய்ச்சி மையம் 6.5 சத வரதட்சணை புகார்கள் பொய்யானது என்று தெரிவித்தது.[5]

ஆகஸ்ட் 2010 ல் உச்ச நீதிமன்றம் வரதட்சணை சட்டத்தில் மாறுதல் செய்ய இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.[6] ஜனவரி 2012 ல் இந்திய சட்ட ஆணைக்குழு[7] 498-A மறு ஆய்வு செய்து இதை கணிக்கும்படி(dilution) பரிந்துரை செய்தது[8]. இச்சட்டம் குற்றம் சுமத்தப்பட்டோர் எளிதில் பிணையில் (ஜாமீனில்) வெளியே வரலாம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramesh, Randeep (12 December 2007). "Dowry law making us the victims, says India's men's movement". The Guardian. Retrieved 17 November 2014.
  2. "Disposal of Cases by Courts". National Crime Records Bureau, India. 2010-01-16. Retrieved2011-01-17.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2015-01-30.
  4. Stiffer dowry law may lead to more abuse
  5. A Research study on the use and misuse of Section 498A of the Indian Penal Code
  6. "Amend dowry law to stop its misuse, SC tells govt". The Times Of India. 17 August 2010.
  7. "Misuse forces a review of dowry law". Hindustan Times. 2011-02-28. Retrieved 2013-02-18.
  8. http://www.firstpost.com/fwire/law-commission-recommends-dilution-of-anti-dowry-law-188059.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரதட்சணை_சட்டம்&oldid=3570870" இலிருந்து மீள்விக்கப்பட்டது