வரட்டனப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரட்டனப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635120

வரட்டனப்பள்ளி (Varattanapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

வரட்டனப்பள்ளியில் உள்ள நரசிம்ம சுவாமி கோயில் அருகே உள்ள குன்றில் காணப்படில் இராஜராஜ கற்கடக மகாராஜன் கண்ணுடைய பெருமாள் என்பவன் இருபத்தெட்டு பிராமணர்களுக்கு வறட்டனப்பள்ளி என்ற கங்கராயச் சதுர்வேதி மங்கலத்தை கொடையாக வழங்கிய செய்தி உள்ளது. வரட்டனப்பள்ளியில் இன்னொரு பெயரான கங்கராயச் சதுர்வேதி மங்கலம் என்பது இப்போது வழக்கில் இல்லை. வறட்டனப்பள்ளி என்ற பெயரில் இருந்த வல்லின றகரம் இடையின ரகரமாக தற்போது மாறியுள்ளது.[2]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வட்டத் தலைநகரான பர்கூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 254 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[3]

கோயில்கள்[தொகு]

விழாக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 113. 
  3. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Bargur/Varattanapalli


"https://ta.wikipedia.org/w/index.php?title=வரட்டனப்பள்ளி&oldid=3657555" இலிருந்து மீள்விக்கப்பட்டது