வரகுக் கோழி
வரகுக் கோழி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Gruiformes |
குடும்பம்: | Otididae |
பேரினம்: | Sypheotides Lesson, 1839 |
இனம்: | S. indicus |
இருசொற் பெயரீடு | |
Sypheotides indicus (Miller, 1782) | |
![]() | |
Spot distribution map (includes historic records) | |
Overall distribution (reddish) and breeding areas (green) | |
வேறு பெயர்கள் | |
Sypheotis aurita |
வரகுக் கோழி (lesser florican) என்பது ஒரு பெரிய பறவை ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தில் உயரமான புல்வெளிகள், புதர்கள் உள்ள இடங்களில் இவை காணப்படுகிறன. இவற்றின் உறைவிடங்கள் அழிக்கப்படுவதாலும், இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாலும் இவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோய் அரிய பறவை ஆகிவிட்டது. தமிழ்நாட்டிலிருந்த புல்வெளிகள் சீரழிக்கப்பட்டதால் இங்கிருந்த வரகுக்கோழிகளை் மறைந்துவிட்டன.[2]
விளக்கம்[தொகு]
இப்பறவை வான்கோழியைவிட மிகப் பெரியதாக, மஞ்சள் நிறக் கால்களுடன் ஏறக்குறைய 4 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. நன்கு வளர்ந்த ஆண்கோழி 40 ராத்தல் எடையிருக்கலாம். மேற்பாகம் சிவப்பாகவும் அடிப்பாகம் வெளுத்தும் மார்பில் ஒரு கருங்குறியும் இருக்கும். மொட்டைக் கருங்கொண்டையை உடையது. இதன் கால்களில் பின்விரல்கள் கிடையாது. ஆண் பறவைகளுக்கு இனச்சேர்க்கைக் காலத்தில் தலை கழுத்து கீழ்பகுதிகளில் கறுமை நிற இறகுகள் தோன்றும். இதன் சிறகுகள் கருமை படர்ந்த மங்கிய மஞ்சள் நிறத்திலும், கொண்டை இறகுகள் கறுமையாக இருக்கும். பெண்பறவை சற்றுப் பெரியதாகவும், கருமைபடர்ந்த இள மஞ்சள் நிறத்திலும் இருக்கும். நன்கு ஓடும் ஆற்றலும், பெரிய இறக்கைகளைப் பரப்பி நன்றாகப் பறக்கும் திறமையும் இதற்கு உண்டு.
உணவுப்பழக்கம்[தொகு]
புதர் அதிகமாக இல்லாத வெளியிடங்களில் தத்துக்கிளி போன்ற பூச்சிகளையும், பல்லிகளையும், சிறுபாம்புகளையும் பிடித்துத் தின்னும். தானியங்களையும் தின்னும்.[3]
குறிப்புகள்[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Sypheotides indicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ சு. தியடோர் பாஸ்கரன் (28 மார்ச் 2018). "தோட்டத்துக்கு வந்த தேன்பருந்து". கட்டுரை. தி இந்து தமிழ். 3 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1986, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.