வயிற்றுப்புண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வயிற்றுப்புண்

முன்னுரை[தொகு]

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையினாலும், ஃபாஸ்ட்புட் உணவுகளினாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அல்சர் என்னும் வயிற்றுப்புண் பிரச்சனையினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்தப் பிரச்சனையிலிருந்து தீர்வு பெறுவதற்கு சில உணவுப் பொருட்கள் நமக்கு உதவிபுரிகின்றன. அவைகளைப் பற்றி அறிவோம்.

திராட்சை[தொகு]

அல்சரை குணப்படுத்துவதில் திராட்சை ஒரு அற்புத மருந்தாக விளங்குகிறது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் திராட்சை ஜீஸ் அருந்தினால் விரைவிலேயே அல்சர் குணமாகும். அதுமட்டுமின்றி தலைசுற்றல்,மலச்சிக்கல்,கை-கால் எரிச்சல் பிரச்சனைகள் தீரும். மேலும் காய்ந்த திராட்சை மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்.

மணலிக்கீரை[தொகு]

மணல்கீரை, நாவமல்லிக்கீரை எனப்படும் மணலிக் கீரையானது வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அந்த மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்துக் கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பூச்சியானது முற்றிலுமாக நீங்கும். மேலும், மணலிக் கீரையின் காம்புகளை நீக்கிவிட்டு கீரையில் நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாகஎடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும். மேலும், மணலிக்கீரை கஷாயம் செய்து அருந்தி வந்தல் ஈரல் பலப்படும்

சீதாப்பழம்[தொகு]

குடல்புண்ணை குணப்படுத்துவதில் சீதாப்பழம் சிறந்த பங்காற்றுகிறது. குறிப்பாக இதில் உள்ள தாமிரச்சத்துää குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பழம் சாப்பிட்டுவந்தால் அது கடலிலுள்ள அமிலத்தன்மையைச் சரிசெய்யும். வயிற்றில் புண்கள் வராமலும் தடுக்கும். மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து,மெக்னீஷியம்,பொட்டாஷியம்ää காப்பர்ää வைட்டமின் சி, வைட்டமின் ஏ புரதம், தாதுஉப்புகள், நார்ச்சத்து, குளுக்கோஸ், சுக்ரோஸின் போன்றவை அதிகமிருப்பதால் இது ரத்த விருத்திக்கும், ரத்தசோகைக்கும் நல்லதொரு மருந்தாகும்.

வெற்றிலை[தொகு]

வயிற்றுக் கோளாறுகளை சரி செய்வதிலும், ஜீரண சக்தி அதிகரிப்பதிலும் வெற்றிலை சிறப்பான இடம் வகிக்கிறது. தினமும் வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். மேலும்ää வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருள் இருப்பதாலும்ää கால்சியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, புரதச் சத்து கொழுப்புச் சத்து, கால்சியம் தயமின்,ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் அது வயிற்றுப் புண்ணை குணமாக்குவதோடு ஜீரணசக்தியை அதிகரித்து செரியாமை பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது.

பிரண்டை[தொகு]

பிரண்டை வயிற்றுக்கு இதமளிக்கும் அற்புத உணவுப்பொருளாகும். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் வாரத்துக்கு இரண்டு நாட்கள் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலியை குணப்படுத்தும். அத்துடன் தீராத வயிற்றுப்புண்,வயிற்று வலியைப் போக்கும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.

முருங்கைக் கீரை[தொகு]

முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துவந்தால் வயிற்றுப்புண்ணை இது வேகமான ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களைப் பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுளுக்கு, நீர்க்கடுப்பு போன்றவற்றைப் போக்கும். உடல்சூட்டைத் தணிக்கும். இதனால் கண்சூடு குறைந்து. பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தைக் குறைக்கும்.இளநரையைப் போக்கும். மேலும், முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்தப் பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த,கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது.

அத்திக்காய்[தொகு]

வயிற்றுக்குள் இருக்கும் அகத்தீயை ஆற்றுவதில் அத்திக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்திக்காயின் விதையை நீக்கி நன்றாக ஒரே தடவை அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே வயிற்றுப்புண் குணமாகும். அத்துடன் இது கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

வாழைக்காய்[தொகு]

பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள வாழைக்காய் வயிற்றுப்புண்ணுக்குத் தீர்வளிக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும், இதில் மாவுச்சத்து அதிகமிருப்பதால்ää வாழைக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். 90 டெ உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற ஆற்றலை வாழைக்காயின் மூலம் பெற்றுவிட முடியும்.

புடலங்காய்[தொகு]

புடலங்காய்அஜீரண தொல்லையைப் போக்குவதோடு, உணவை எளிதில் ஜீரணமாக்கி நல்ல பசியை உண்டாக்கும்.

இதுமட்டுமின்றி அறுகம்புல், துளசி, அரசு,கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, வில்வம், பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை,இளநீர் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது. [1]

  1. கல்கண்டு-வார இதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயிற்றுப்புண்&oldid=2603693" இருந்து மீள்விக்கப்பட்டது