வயலட் ஆல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயலட் ஆல்வா
Violet Alva
Joachim and Violet Alva 2008 stamp of India.jpg
யோக்கிமும் வயலட்டும், 2008
மாநிலங்களவையின் 2-வது துணைத் தலைவர்
பதவியில்
19 ஏப்ரல் 1962 – 16 நவம்பர் 1969
முன்னவர் எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ்
பின்வந்தவர் பி. டி. கோப்ரகேடு
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
3 ஏப்ரல் 1952 – 2 ஏப்ரல் 1960
தனிநபர் தகவல்
பிறப்பு வயலட் ஹரி
ஏப்ரல் 24, 1908(1908-04-24)
அகமதாபாத், மும்பை, இந்தியா
இறப்பு 20 நவம்பர் 1969(1969-11-20) (அகவை 61)
புது தில்லி
இறப்பிற்கான
காரணம்
பெருமூளை இரத்த ஒழுக்கு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்)
யோக்கிம் ஆல்வா (தி. 1937)
பணி
  • வழக்கறிஞர்
  • ஊடகவியலாளர்
  • அரசியல்வாதி

வயலட் ஆல்வா (Violet Alva, 24 ஏபரல் 1908 – 20 நவம்பர் 1969) ஒரு இந்திய வழக்கறிஞர், பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல்வாதி, மாநிலங்களவையின் துணைத் தலைவர் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் இருந்தார்.[1][2][3] இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்காடிய முதல் இந்திய பெண் வழக்கறிஞர் என்றும் மாநிலங்களவைக்குத் துணை அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எனவும் அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஆல்வா, வயலட் ஹரியாக 1908 ஏப்ரல் 24 இல் அகமதாபாதில் பிறந்தார். இவர் க்டும்பத்தில் ஒன்பது பிள்ளைகளில் எட்டாவதாகப் பிறந்தார். வயலட்டின் தந்தை அருட்திரு லட்சுமணன் ஹரி ஆகும். இவர் இங்கிலாந்து திருச்சபையின் முதல் இந்திய சபைத் தலைவர்களில் ஒருவர் ஆவார். தனது 16 வயதிலே இரு பெற்றோரையும் இழந்ததால் வயலட்டின் மூத்த சகோதர சகோதரிகள் மும்பையின் கிளேர் சாலை மடத்தில் பதின்நிலை பள்ளிபடிப்பை முடிக்கும் வரை உதவி செய்தனர். இவர் மும்பையில் உள்ள பரிசுத்த சேவியர் கல்லூரி மற்றும் அரசாங்க சட்டக் கல்லூரியில் தனது பட்டங்களைப் பெற்றார். அதன் பிறகு சில நாட்கள் இவர் இந்திய மகளிர் கல்லூரி, மும்பையில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தார்.

பணி[தொகு]

1944 ஆம் ஆண்டு இவரே உயர் நீதிமன்றத்தில் முழு நடுவர்குழு மன்றத்தின் முன் வழக்காடிய முதல் இந்திய பெண் வழக்கறிஞர் ஆவார். 1944 இல் இவர் ”பேகம்” என்று அழைக்கப்பட்டு பின் “இந்தியப் பெண்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு பத்திரிகையையும் ஆரம்பித்தார். 1946 முதல் 1947 வரை இவர் மாநிலங்களவையின் துணை அவைத்தலைவராக இருந்தார். 1947 இல் மும்பையில் கௌரவ குற்றவியல் நடுவராகப் பணிபுரிந்தார். மேலும் 1948 முதல் 1954 வரை இவர் இளங் குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தில் தலைவராகப் பணியாற்றினார். இவர் ஈடுபாடோடு அநேக கிறித்தவ இளம் பெண்கள் சங்கம், பெண் வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் சங்கம் மேலும் பன்னாட்டு பெண் வழக்கறிஞர்கள் அமைப்பு போன்ற சமூக நிறுவங்களில் இணைந்து பணி புரிந்தார். மேலும் இவர் 1952 இல் நடைபெற்ற அகில இந்திய செய்தித்தாளின் பதிப்பாசிரியர்கள் கூட்டத்தின் முதல் பெண் நிலைக்குழு தலைவரும் இருந்தார்.[4]

1952 இல் ஆல்வா இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையாகிய மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கு இவர் குறிப்பிடத்தக்க வகையில் குடும்ப நலக் கட்டுப்பாடு, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் உரிமை மற்றும் இராணுவ யுத்தி வியூகங்கள் முக்கியமாக கடல் படைக்கு என்று பல கணிசமான குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்றார். இவர் அந்நிய செலவாணியில் அரசு மூலதனம் செலுத்தும் போது கவனமாக இருக்க எச்சரிக்கை செய்தார்[5] மற்றும் மொழிவாரியான மாநிலங்களுக்கு ஆதரவு அளித்தார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற 2-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இவர் உள்துறை அமைச்சகத்தின் துணை மந்திரியானார்.

1962 இல் ஆல்வா மாநிலங்களவையின் துணை அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இரு முறை மாநிலங்களவையில் சேவை செய்தார். இவரின் முதல் பணிக்காலம் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள் தொடங்கி 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 வரை தொடர்ந்தது. இரண்டாவது பணிக் காலம் 7 ஆம் தேதி ஏப்ரல் 1966 ஆம் ஆண்டு தொடங்கியது இவர் இந்த பதவியில் 1969 ஆம் ஆண்டு நவம்பர் 16 வரை பணி புரிந்தார்.[5][6] 1969 ஆம் ஆண்டு இந்திரா காந்தி இவரை துணை குடியரசு தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்யாததால் பதவியில் இருந்து விலகினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1973 ஆம் ஆண்டு வயலட் ஹரி அரசியல்வாதி, வழக்கறிஞர், பத்திரிக்கையாளர் மற்றும் பின்னாள் சுதந்திர போராட்ட வீர்ர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோக்கிம் ஆல்வாவை திருமணம் புரிந்தார். இருவரும் இணைந்து சட்டத் தொழிலை செய்து வந்தனர். ஆல்வா தம்பதியினருக்கு இரண்டு ஆண் மக்கள் உண்டு. ஒருவர் நிரஞ்சன் மற்றொருவர் சித்தரஞ்சன். மாயா என்ற ஒரு மகளும் உண்டு. நிரஞ்சன் ஆல்வா மார்க்ரெட்டை மணம் புரிந்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் முந்தைய ஆளுநர் ஆவார். 1943 ஆம் ஆண்டு வயலட் ஆல்வா பிரித்தானிய இந்திய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். அந்த வேளையில் அவர் தனது இரண்டாவது மகனை கருத்தரித்திருந்தார். ஆல்வா ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார்.[7]

மறைவு[தொகு]

மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகிய ஐந்து நாட்களில் வயலட் ஆல்வா 1969 நவம்பர் 20 காலை 7:45 மணிக்கு புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பெருமூளை இரத்த ஒழுக்கு ஏற்பட்டு இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வயலட் ஆல்வா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 "Violet Alva dead". The Indian Express: pp. 1, 6. 20 November 1969. 
  2. "Former Deputy Chairmen of the Rajya Sabha". மாநிலங்களவை Official website. 2017-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-03-03 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Violet Alva". veethi.com. 19 August 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "StreeShakti – The Parallel Force". www.streeshakti.com. 19 August 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 "Rajya Sabha Members Biographical Sketches 1952 – 2003 :A" (PDF). Rajya Sabha website. 2019-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2020-03-03 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Biographical Sketches of Deputy Chairmen Rajya Sabha" (PDF). மாநிலங்களவை website.
  7. "Smt. Margaret Alva,: Bio-sketch". இந்திய நாடாளுமன்றம் website. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலட்_ஆல்வா&oldid=3570825" இருந்து மீள்விக்கப்பட்டது