வயந்தகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வயந்தகன் [1] என்பவன் பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். காப்பியத் தலைவன் உதயணன் கோசம்பி நகரில் இருந்துகொண்டு வத்தவ நாட்டையும், வைசாலியில் இருந்துகொண்டு சேதி நாட்டையும் ஓராட்சிக்கு உட்பட்ட நாடாக ஆண்டுவந்தான். பின்னர் தாய்மாமன் விக்கிரமன் தனக்கு அளித்த சேதி நாட்டு ஆட்சிப் பொறுப்பைத் தன் நண்பன் யூகியிடம் ஒப்படைத்துவிட்டு, தந்தை சதானிகன் தனக்கு அளித்த வத்தவ நாட்டை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் உதயணனுக்கு உற்ற நண்பர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கிய மூவரில் இவன் முதல்வன். ஏனையோர் உருமண்ணுவா, இடவகன் என்போராவர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயந்தகன்&oldid=1839610" இலிருந்து மீள்விக்கப்பட்டது