உள்ளடக்கத்துக்குச் செல்

வயநாடு சீரகசாலா அரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயநாடு சீரகசாலா அரிசி
குறிப்புகேரள மாநிலம் வயநாட்டில் விளையும் நறுமன அரிசி
வகைநறுமன அரிசி
இடம்வயநாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது4 அக்டோபர் 2010
அதிகாரப்பூர்வ இணையதளம்ipindia.gov.in

வயநாடு சீரகசாலா அரிசி (Wayanad Jeerakasala rice) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் முக்கியமாக வளர்க்கப்படும் தங்க மஞ்சள் நிறத்துடன் கூடிய பாரம்பரிய, பாசுமதி அல்லாத, நடுத்தர நறுமண அரிசி வகையாகும்.[1][2][3] இது வயநாடு மாவட்டத்தில் பொதுவாகவும் பரவலாகவும் பயிரிடப்படும் ஒரு பயிர்.[4][5][6] இதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வகை, வயநாடு காந்தகசாலா அரிசி. இது இதன் சந்தன மனத்திற்காகவும் சுவைக்காகவும் பெயர் பெற்றது. வயநாடு சீரகசாலா அரிசி தோற்றத்திலும் சுவையிலும் சீரகத்தை ஒத்திருக்கிறது. ஆனால் மிகவும் தனித்துவமானது.[7]

இந்தியப் புவிசார் குறியீட்டின் கீழ், இது "வயநாடு சீரகசாலா அரிசி" என்று குறிப்பிடப்படுகிறது.[8]

பெயர்

[தொகு]

வயநாட்டில் சீரகசாலா அரிசி ஒரு மதிப்புமிக்க பயிராகும். மேலும் இது பயிரிடப்படும் இந்த இடத்தின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. "சீரா" என்றால் சீரகம் என்றும், "கசாலா" என்றால் உள்ளூர் மொழியான மலையாளத்தில் விதை என்றும் பொருள்.

விளக்கம்

[தொகு]

வயநாடு சீரகசாலா அரிசியின் பண்புகள்

பண்புகள்

[தொகு]
  • வயநாடு சீரகசாலா அரிசி அதன் மணம், சீரகத்தின் நறுமணத்திற்கு இணையானது.[9] இதன் தனித்துவத்திற்குக் காலநிலை நிலைமைகள், பல்வேறு வகைகள், இயற்கை சாகுபடி முறைகள் ஆகியவை காரணம். வயநாட்டின் பள்ளத்தாக்கு அடிப்பகுதியில் வளர்க்கப்படும் குறைந்த வெப்பநிலை இந்த மணம் கொண்ட அரிசி வகையைப் பயிரிடுவதை ஊக்குவிக்கிறது.[8][10]

சாகுபடி

[தொகு]
  • வயநாடு சீரகசாலா நெல் நாஞ்சா பருவத்தில் (சம்பா) பாரம்பரிய அறிவு, நடைமுறைகளைப் பயன்படுத்திப் பயிரிடப்படுகிறது.[11] வயநாட்டின் பழங்குடியினர், குறிச்சியார்கள், குறும்பர்கள் உட்பட, தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக நெல்லை நம்பியுள்ளனர்.[12] வயநாடு செட்டிகள், குறிச்சியா, குருமா பழங்குடி குழுக்கள் பாரம்பரியமாக இந்த நெல் வகையைப் பயிரிடுகின்றனர். எதிர்காலச் சந்ததியினருக்காக இதைப் பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளனர்.[13]

பயன்பாடு

[தொகு]
  • இந்த அரிசி நெய் சாதம் தயாரிக்கப் பயன்படுகிறது. இது "நெய்சோர்" என்றும் அழைக்கப்படுகிறது. இது கேரள முஸ்லிம்களின் சுவையான உணவாகும். மேலும் இது ஒரு முக்கிய மாப்பிளமார் உணவு வகையாகும்.[8] உப்புமா, பாயசம், புட்டு, அவல் தயாரிக்கவும் வயநாடு சீரகசாலா அரிசி பயன்படுத்தப்படுகிறது.[14]

புவிசார் குறியீடு

[தொகு]

சீர்கசால அரிசி இந்திய அரசின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டில் புவிசார் குறியீடு பதிவு தகுதியினை 4 அக்டோபர் 2010 அன்று பெற்றது. இத்தகுதி 22 செப்டம்பர் 2029 வரை செல்லுபடியாகும்.

திருச்சூரில் உள்ள கேரள வேளாண் பல்கலைக் கழகம், வயநாட்டைச் சேர்ந்த ஜில்லா சுகந்தா நெல்லுல்படக கர்சக சமிதி, வயநாடு சீரகசாலா அரிசியின் புவிசார் குறியீடு பதிவு செய்ய முன்மொழிந்தன.[15][16] செப்டம்பர் 2009-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, 2010ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவேட்டால் அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் "வயநாடு சீரகசாலா அரிசி" என்ற பெயர் இப்பகுதியில் விளையும் அரிசிக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டது.[17] இதனால் இது பொக்காலி அரிசிக்குப் பிறகு கேரளாவிலிருந்து புவிசார் குறியிடு தகுதி பெரும் மூன்றாவது அரிசி வகையாகவும், கேரளாவிலிருந்து புவிசார் குறியீடு பெறும் 20வது வகைப் பொருளாகவும் மாறியது.

புவிசார் குறியீடு அரிசியைச் சட்டவிரோத விற்பனை செய்தல், சந்தைப்படுத்தலிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதற்குச் சட்டப் பாதுகாப்பையும் தனித்துவமான அடையாளத்தையும் வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Laladhas, K. P.; Nilayangode, Preetha; Oommen, Oommen V. (15 November 2016). Biodiversity for Sustainable Development (in ஆங்கிலம்). Springer. p. 232. ISBN 978-3-319-42162-9. Retrieved 15 December 2024.
  2. Organization, World Intellectual Property (29 September 2011). Food Security and Intellectual Property - How the Private and the Public Sectors Use IP to Enhance Agricultural Productivity (in ஆங்கிலம்). WIPO. ISBN 978-92-805-2122-1. Retrieved 15 December 2024.
  3. Manoj, E. M. (28 October 2022). "Wayanad farmer creates Ashoka Chakra using tambo art" (in en-IN). https://www.thehindu.com/news/national/kerala/wayanad-farmer-creates-ashoka-chakra-using-tambo-art-to-promote-rice-cultivation/article66064466.ece.
  4. Verma, Deepak Kumar; Srivastav, Prem Prakash; Nadaf, Altafhusain B. (7 December 2018). Rice Science: Biotechnological and Molecular Advancements (in ஆங்கிலம்). CRC Press. ISBN 978-1-351-13656-3. Retrieved 15 December 2024.
  5. Manoj, E. M. (20 November 2019). "On a 13-acre Wayanad park, rice is the star" (in en-IN). https://www.thehindu.com/news/national/kerala/on-a-13-acre-wayanad-park-rice-is-the-star/article30030514.ece.
  6. Lalitha, N.; Vinayan, Soumya (4 January 2019). Regional Products and Rural Livelihoods: A Study on Geographical Indications from India (in ஆங்கிலம்). Oxford University Press. ISBN 978-0-19-909537-7. Retrieved 15 December 2024.
  7. Sharma, Shatanjiw Das; Rao, Udayagiri Prasada (2004). Genetic Improvement of Rice Varieties of India (in ஆங்கிலம்). Today and Tomorrow's Printers and Publishers. p. 700. ISBN 978-1-55528-291-2. Retrieved 15 December 2024.
  8. 1 2 3 Bhattacharya, Niharika Sahoo (13 September 2022). Geographical Indication Protection in India: The Evolving Paradigm (in ஆங்கிலம்). Springer Nature. ISBN 978-981-19-4296-9. Retrieved 15 December 2024.
  9. Sharma, Shatanjiw Das; Rao, Udayagiri Prasada (2004). Genetic Improvement of Rice Varieties of India (in ஆங்கிலம்). Today and Tomorrow's Printers and Publishers. ISBN 978-1-55528-291-2. Retrieved 17 December 2024.
  10. Roy, Chandan (17 July 2018). The Role of Intellectual Property Rights in Agriculture and Allied Sciences (in ஆங்கிலம்). CRC Press. ISBN 978-1-351-12526-0. Retrieved 15 December 2024.
  11. Thomas, Aleena (25 November 2020). "Why climate change studies on rice production are important in Wayanad". Down To Earth (in ஆங்கிலம்). Retrieved 15 December 2024.
  12. Gopikrishna Warrier, S. (23 January 2016). "Rice genome under threat in unique rice growing valley" (in en). Nature India. doi:10.1038/nindia.2016.9. https://www.nature.com/articles/nindia.2016.9. பார்த்த நாள்: 17 December 2024.
  13. Freese, Tina (26 December 2022). "Kerala's 72-YO 'Guardian of Native Paddy' has Saved 54 Rice Varieties in 20 Years". The Better India. Retrieved 15 December 2024.
  14. Service, Express News (10 April 2022). "Organic farm expo in Ernakulam evokes good response" (in en). https://www.newindianexpress.com/cities/kochi/2022/Apr/10/organic-farm-expo-in-ernakulam-evokes-good-response-2440481.html.
  15. Mohanty, Samarendu; Chengappa, P. G.; Hedge, Mruthunjaya; Ladha, J. K.; Baruah, Sampriti; Kannan, Elumalai; Manjunatha, A. V. (7 June 2017). The Future Rice Strategy for India (in ஆங்கிலம்). Academic Press. ISBN 978-0-12-809297-2. Retrieved 15 December 2024.
  16. "Kerala Agri University tops among institutions securing GI tags for proposed products" (in en). 22 December 2022. https://english.mathrubhumi.com/features/agriculture/kerala-agri-university-tops-among-institutions-securing-gi-tags-for-proposed-products-1.8155923.
  17. Blakeney, Michael; Siddique, Kadambot H. M. (22 June 2020). Local Knowledge, Intellectual Property and Agricultural Innovation (in ஆங்கிலம்). Springer Nature. ISBN 978-981-15-4611-2. Retrieved 15 December 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயநாடு_சீரகசாலா_அரிசி&oldid=4414186" இலிருந்து மீள்விக்கப்பட்டது