உள்ளடக்கத்துக்குச் செல்

வம்போ பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வம்போ பூங்கா குடியிருப்புத் தொகுதிகளின் ஒரு பக்கக் காட்சி
வம்போ பூங்கா குடியிருப்புத் தொகுதிகளின் காட்சி

வம்போ பூங்கா (Whampoa Garden) வம்போ பூங்கா குடியிருப்புத் தொகுதி என்பது ஹொங்கொங், கவுலூன் நகர மாவட்டம், கவுலூன் பகுதியில் ஹொங் ஹாம் நகரில் கட்டப்பட்ட ஒரு மிகப் பெரிய மக்கள் குடியிருப்புத் தொகுதியாகும். இது ஒரு தனியார் குடியிருப்புத் தொகுதியாகும். இந்த தனியார் குடியிருப்புத் தொகுதி "ஹச்சிசன் வம்போ வரையறுக்கப்பட்ட நிறுவனம்" ஊடாக கட்டப்பட்டது ஆகும்.

இந்த வீட்டுக் குடியிருப்புத் தொகுதிகளின் நடுவே ஒரு கப்பல் வடிவ குடியிருப்புத் தொகுதியும் ஒன்று உள்ளது.

மேலதிக விளக்கம்

[தொகு]

இது முன்னாள் "வம்போ" எனும் பெயரில் கப்பல் கட்டுமிடமாக இருந்த இடமாகும். இந்த குடியிருப்புத் தொகுதிகளின் கட்டுமாணப் பணி 1991 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்த "வம்போ பூங்கா" குடியிருப்புத் தொகுதிகள் 12 வளாகங்களைக் கொண்டுள்ளது. இந்த 12 வளாகங்களுக்குள்ளும் 88 குடியிருப்புக் கட்டடங்களைக் கொண்டுள்ளன. அவை குடியிருப்புத் தொகுதிகளாகவும், வணிகக் கட்டடங்களாகவும் உள்ளன. இந்த வீட்டுத் தொகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 ஆயிரம் மக்கள் வசிப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பு வளாகங்களுக்குள் உள்ளோருக்கான அனைத்து வசதிகளும் உள்ளன. அதாவது வணிகக் கட்டடங்கள், பூங்கா, பேருந்து மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தகம், திரையரங்கு, உணவகங்கள், ஆரம்ப பாடசாலைகள், பாரிய குடியிருப்பாளர் வாகனத் தரிப்பிடம் போன்றனவும் உள்ளடக்கம்.

இந்த குடியிருப்புத் தொகுதிகள் 12 லும், உள்ள 88 கட்டடங்களிலும் உள்ள வீடுகளில் எண்ணிக்கை 10,519 ஆகும். ஒவ்வொன்றும் 350 முதல் 1,110 சதுர அடிகளைக் கொண்ட வீடுகளாகும்.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Whampoa Garden
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்போ_பூங்கா&oldid=3372206" இலிருந்து மீள்விக்கப்பட்டது