வன மேலாண்மை
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
ஒரு வனத்தில் வனவியல் கோட்பாடுகள், வணிகக் கோட்பாடுகள் ஆகியவற்றை சீரிய முறையில் பயன்படுத்தி அவ்வனத்திற்கென்று சில சில குறிக்கோள்களை எட்டுவது வன மேலாண்மை ஆகும். எனவே ஒரு வன நிர்வாகி வனவியல் சம்மந்தப்பட்ட பல துறைகளான மர வளர்ப்பியல், வன அளவியல், மரம் வெட்டும் முறைகள், மர நுட்பம், மர அறிவியல், வன சுற்றுப்புறவியல், வன பூச்சியல், வன நோயியல், பொருளியல், வன மண்ணியல், நீர்த் தேக்க நிர்வாகம், வணிக நிர்வாகம், விற்பனை, சமூகவியல், வன விலங்கியல் போன்றவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேற்கூறிய அனைத்து துறையிலும் ஒருவர் விற்பன்னராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் இவை அனைத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றிருத்தல் வனத்தை நல்ல முறையில் நிர்வகிக்க முடியும்.
இந்தியாவில் வன நிர்வாகம் என்பது 1867 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. சர் டெய்ட்ரிச் பிராண்டிஸ் என்பார் இந்தியாவில் தலைமை வன கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இந்திய வனப்பணி தொடங்கப்பட்டது. இப்போதைய வன நிர்வாகக் கொள்கையில் முக்கிய கூறு வகிப்பவை வன பாதுகாப்பு, வன மேம்பாடு மற்றும் சமூக வனம் ஆகியவை ஆகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அறிவியல் களஞ்சியம் - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு எண் 344 - பக்கம் 657 - நவம்பர் 2009